சீனா: `இது உண்மைதான்’ – பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்ட நகரம்; கண்ணைக் கவரும் பனித் திருவிழா!

  • 9

உலகத்தில் பல நாடுகள் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல தடுமாற்றங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவோ வழக்கமாக நடக்கும் கொண்டாட்டங்களில் மும்முரமாகவே உள்ளது. சீனாவில் வருடா வருடம் நடத்தப்படும்‌ பனித் திருவிழா‌ இந்த வருடமும் தொடங்கப்பட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த பனித் திருவிழா சீன நாட்டின் வடகிழக்கு மாகாணமான ஹைலோன்ஜியாங்கில் (Heilongjiang) உள்ள ஹார்பின் (Harbin) என்னும் ஊரில் நடைபெறும். இந்த வருடம் நடைபெறுவது 38 வது பனித் திருவிழா. டிசம்பர் 25-ம் தேதியே தொடங்கிவிட்ட‌ இந்த திருவிழா பிப்ரவரி மாத இறுதி வரை இரண்டு மாதங்கள் நடைபெறுமாம். இந்த பனி‌ திருவிழாவின் சிறப்பே முற்றிலும் பனியால் கட்டப்பட்ட கட்டிடங்களும் பனியை வைத்து செதுக்கப்பட்ட சிற்பங்களும்தான். கட்டிடங்கள் என்றால் சாதாரணமாக சின்ன சின்ன கட்டிடங்கள் கிடையாது. பனியால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட கோபுரங்கள், மாளிகைகள் என ஒரு பனி நகரமே இந்த திருவிழாவில் நம் கண் முன்னே இருக்கும். முற்றிலும் பனியாலேயே உருவாக்கப்பட்ட உணவகங்கள் கூட இருக்கும்.

பனித் திருவிழா

பனியினால் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்ட சிலைகளுக்குப் பஞ்சம் இருக்காது. இந்த திருவிழா முதலில் சீனாவில் தோன்றியது 1963-ம் ஆண்டில்தான். பிறகு சில அரசியல் காரணங்களால் இந்த திருவிழா தடைபட்டிருந்தாலும் 1985-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு பனியில் செய்யப்பட்ட விலங்குகள், பூக்கள், அருவிகள் ,மேற்கத்திய சர்ச்கள் என‌ பல்வேறு புதுமைகள் இருக்கும். ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்துக்கான “தீம்”மிற்கு ஏற்ப இது மாறும். 2009 -ம் ஆண்டு நடந்த பனித் திருவிழாவிற்கு டிஸ்னி ஸ்பான்ஸர் செய்ததால் அந்த வருடம் பனியினால் ஆன டிஸ்னி கேரக்டர்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த வருடத்திற்கான தீமாக “குளிர்கால ஒலிம்பிக்” எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கிராமங்களின்‌ மாதிரிகளை பனியினால் அப்படியே உருவாக்கியுள்ளார்கள். இவை பீய்ஜிங்கில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை ஊக்குவிப்பதற்காகவே அமைக்கப்பட்டவை.

இப்படி பனியினால் ஆன ஒரு நகரத்தையே உருவாக்க 400க்கும் மேற்பட்ட‌ கலைஞர்கள் டிசம்பர் மாதம் முழுவதும் உழைக்கிறார்கள். கட்டடங்களைக் கட்டுவதற்கான பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பனிக்கட்டிகள் ஹார்பின் நகரத்திற்கு அருகில் ஓடும் சோன்குவா (Songhua)நதியிலிருந்து எடுத்துவரப்படுகின்றன. இந்த பனிக்கட்டிகளை வைத்து கட்டிடங்களை உருவாக்கும் கலைஞர்களுள் ஒருவரான வாங்க் க்யூஷெங்க் கூறுகையில்,”நிஜ பனிக்கட்டிகள் வைத்து மட்டுமே கட்டிடங்களை உருவாக்க முடியும்.செயற்கை பனிக்கட்டிகள் இவ்வளவு உறுதியாகவும் காற்றின் வேகத்தைத் தாங்கும் வகையில் இருக்காது.” என்கிறார்.

பனித் திருவிழா

டிசம்பர் மாதம் முழுவதும் உறையும் பனியில் வேலை செய்யும் இந்த கலைஞர்கள் உறுதியான கோட் மற்றும் கையுறைகளுடன் காலையிலிருந்து இரவு வரை உழைக்கிறார்கள்; சில சமயங்களில் இரவு தாண்டி நடுராத்திரியில்கூட உழைக்க வேண்டிய சூழல் வருமாம்.இவர்களின் இந்த கடின உழைப்பினால்தான் இந்த அழகிய பனி நகரம் பிரமாண்டத்‌ தோற்றம் எடுக்கிறது. இந்த பனி திருவிழாவில் வெவ்வேறு கலை நிகழ்ச்சிகளும் வான வேடிக்கைகள் கூட நடைபெறும்.

பனித் திருவிழா

பனி சம்பந்தமான‌ சாகச விளையாட்டுக்கள், பனி சறுக்குதல், பனியில் வண்டி ஓட்டுதல், பனியில் விளையாடும் ஹாக்கி, கால்பந்து எனப் பல பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து உள்ளன. பொதுவாக டிசம்பர்‌ மாத இறுதியில் இந்த திருவிழா தொடங்கினாலும் ஜனவரி முதல் வாரத்தில் தான் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கூடிய முறையான தொடக்க விழா நடக்கும். பிப்ரவரி மாத இறுதி வரை இருக்கும் இந்த விழாவிற்கு முறையான முடிவு விழா என்றெல்லாம் இருக்காது. மார்ச் மாத தொடக்கத்தில் பனியெல்லாம் தானாகவே உருகிவிடுமாம்.”ஃப்ரோசன்” (Frozen) படத்தில் வந்த பனி மாளிகைகளை நேரில் கண்டு ரசிக்க இந்த ஹார்பின் பனித்திருவிழாவிற்குதான் செல்ல வேண்டும்.

AIARA

🔊 Listen to this உலகத்தில் பல நாடுகள் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல தடுமாற்றங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவோ வழக்கமாக நடக்கும் கொண்டாட்டங்களில் மும்முரமாகவே உள்ளது. சீனாவில் வருடா வருடம் நடத்தப்படும்‌ பனித் திருவிழா‌ இந்த வருடமும் தொடங்கப்பட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த பனித் திருவிழா சீன நாட்டின் வடகிழக்கு மாகாணமான ஹைலோன்ஜியாங்கில் (Heilongjiang) உள்ள ஹார்பின் (Harbin) என்னும் ஊரில் நடைபெறும். இந்த வருடம் நடைபெறுவது 38 வது பனித் திருவிழா.…

AIARA

🔊 Listen to this உலகத்தில் பல நாடுகள் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல தடுமாற்றங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவோ வழக்கமாக நடக்கும் கொண்டாட்டங்களில் மும்முரமாகவே உள்ளது. சீனாவில் வருடா வருடம் நடத்தப்படும்‌ பனித் திருவிழா‌ இந்த வருடமும் தொடங்கப்பட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த பனித் திருவிழா சீன நாட்டின் வடகிழக்கு மாகாணமான ஹைலோன்ஜியாங்கில் (Heilongjiang) உள்ள ஹார்பின் (Harbin) என்னும் ஊரில் நடைபெறும். இந்த வருடம் நடைபெறுவது 38 வது பனித் திருவிழா.…

Leave a Reply

Your email address will not be published.