சீனாவைக் கடுப்பேற்றும் இந்திய, ரஷ்ய உறவு?! AK-203, S-400 ஏவுகணை பர்ச்சேஸ் – இரண்டிலும் என்ன ஸ்பெஷல்?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று (டிச.6) இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின் சிறப்பம்சமாக, இரு நாடுகளுக்குமிடையே 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில், ஏ.கே-203 ரக துப்பாக்கிகளும், எஸ்-400 ரக ஏவுகணை கருவிகளும்தான் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த இரண்டு அதிநவீன ஆயுதங்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யவிருப்பது சீனாவைக் கடுப்பேற்றியிருப்பதாகவும் சில செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அப்படி இந்த இரண்டு ஆயுதங்களிலும் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்!

ஏ.கே-203 ரைஃபிள்!

புகழ்பெற்ற ஏகே-47 துப்பாக்கிகளை முதன்முதலாக உருவாக்கிய ரஷ்யாதான், இந்த ஏ.கே-203 ரகத் துப்பாக்கிகளையும் தயாரித்திருக்கிறது. முதலில், ஏ.கே-103 என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த துப்பாக்கியில், 2018-ம் ஆண்டு சில மேம்பாடுகளைச் செய்தார் ரஷ்ய விஞ்ஞானி மிக்கெயில் கலாஷ்நிக்கோவ். அதன் பிறகு ஏ.கே-203 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்குவந்தது.

புதின் – மோடி

Also Read: புதிரான புதின்; `தில்’ வெற்றியா, `தில்லு முல்லு’ வெற்றியா? – ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் சம்பவங்கள்!

இந்த துப்பாக்கியிலிருக்கும் தோட்டாக்கள், முந்தைய துப்பாக்கி தோட்டாக்களைவிட பெரிதாக இருக்கும். அதனால் அதிக வெடிமருந்துகளைத் தாங்கிச் செல்லக்கூடியதாக இந்தத் தோட்டாக்கள் இருக்குமென்கிறார்கள். பழைய துப்பாக்கிகளின் தோட்டாக்கள் 5.56 மி.மீ அளவுகொண்டவை. ஆனால், ஏ.கே-203 ரைஃபிளிலுள்ள தோட்டாக்கள், 7.62 மி.மீ அளவுகொண்டது. இந்த ரக துப்பாக்கிகளிலிருந்து வெளிவரும் தோட்டாக்கள், 300 மீட்டர் வரை பாய்ந்து துல்லியமாக இலக்கை எட்டக்கூடியவை. எடை குறைவானதாகவும், நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதாகவும் ஏ.கே-203 ரைஃபிள்கள் இருக்குமென்கிறார்கள் ஆயுத ஆராய்ச்சியாளர்கள். இந்த ரக ரைஃபிள்களைப் பராமரிப்பதும் எளிது எனச் சொல்லப்படுகிறது.

இதன் சிறப்புகளை அறிந்த இந்தியா, 2018-ம் ஆண்டு முதலே ஏ.கே-203 ரகத் துப்பாக்கிகளை வாங்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியது. ஆனால், தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கல், அதிக விலை உள்ளிட்டவற்றால் அந்தத் திட்டம் பாதியிலேயே நின்றுபோனது. பின்னர், கடந்த சில காலம் முன்பு, 7.5 லட்சம் ஏ.கே-203 ரைஃபிள்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குவது என்ற முடிவுக்கு வந்தது இந்தியா. இந்த நிலையில், இந்தியாவிலேயே ஏ.கே-203 துப்பாக்கிகளைத் தயாரிப்பது என்ற முடிவு நேற்று எட்டப்பட்டிருக்கிறது. இதன்படி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி பகுதியில் துப்பாக்கித் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, அங்கு ஐந்து லட்சம் ஏ.கே-203 துப்பாக்கிகள் தயாரிக்கப்படவிருக்கின்றன. இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் இந்தத் தொழிற்சாலையில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படவிருக்கின்றன.

AK-203

இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் இன்சாஸ் ரகத் துப்பாக்கிகளில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகத் தெரிகிறது. இன்சாஸ் ரகத் துப்பாக்கிகள் மூலம், குளிர்காலங்களில் சுடுவது கடினமாக இருப்பதாகவும், பராமரிப்பதற்கு எளிதாக இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சிறிய ரக தோட்டாக்கள் என்பதால், தூரத்திலிருக்கும் எதிரிகளைச் சுடும்போது, அவர்கள் காயத்தோடு தப்பிவிடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதற்கெல்லாம் விடை தரும் வகையில் ஏ.கே-203 ரகத் துப்பாக்கிகளின் செயல்பாடுகள் இருக்குமென்கிறார்கள் ஆயுத வல்லுநர்கள்.

எஸ்-400 ஏவுகணை!

மோடி – புதின் சந்திப்பில், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறது. சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கொண்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைக் கருவிகளைக் கொள்முதல் செய்யவிருக்கிறது இந்தியா.

உலகின் அதிநவீன ஏவுகணையாகக் கருதப்படும் எஸ்-400 ரக ஏவுகணைகள், எஸ் 300 ரக ஏவுகணைகளிலிருந்து மேம்படுத்தப்பட்டவை. 1993-ம் ஆண்டு, எஸ் 300 ஏவுகணைகளை மேம்படுத்தும் பணியைத் தொடங்கியது ரஷ்யா. 1999 முதல் அந்த ஏவுகணைகள் டெஸ்ட்டிங் செய்யப்பட்டன. 2007-ம் ஆண்டு அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது ரஷ்யா.

S 400

Also Read: நவால்னி: புதின் மீதான புகார்கள்.. விஷம் முதல் விமான நிலையக் கைது வரை! -ரஷ்யாவில் என்ன நடக்கிறது?

எதிரி நாடுகளின் வான்வழித் தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்து, பதில் தாக்குதல் நடத்தும் திறன்கொண்டவை எஸ்-400 ரக ஏவுகணைகள். இவை, போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தையும் கண்டறிந்து தாக்கக்கூடிய திறன் பெற்றதவை என்றும் சொல்லப்படுகிறது. இந்த ரக ஏவுகணைகள், 400 கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாகப் பயணித்துத் தாக்கக்கூடியவை என்றும் கூறப்படுகிறது.

“ஏ.கே-203 ரைஃபிள், எஸ்-400 ஏவுகணை என இரண்டு பாதுகாப்பு ஆயுதங்கள் தொடர்பாக ரஷ்யாவுடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை நிச்சயம் மேம்படுத்தும்” என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

AIARA

🔊 Listen to this ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று (டிச.6) இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின் சிறப்பம்சமாக, இரு நாடுகளுக்குமிடையே 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில், ஏ.கே-203 ரக துப்பாக்கிகளும், எஸ்-400 ரக ஏவுகணை கருவிகளும்தான் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த இரண்டு அதிநவீன ஆயுதங்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொள்முதல்…

AIARA

🔊 Listen to this ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று (டிச.6) இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின் சிறப்பம்சமாக, இரு நாடுகளுக்குமிடையே 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில், ஏ.கே-203 ரக துப்பாக்கிகளும், எஸ்-400 ரக ஏவுகணை கருவிகளும்தான் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த இரண்டு அதிநவீன ஆயுதங்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொள்முதல்…