சில்லி பாய்ண்ட்…

சில்லி பாய்ண்ட்…

  • 3

* தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்து தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. * ஐபிஎல் தொடரின் முக்கிய ஸ்பான்சராக  டாடா நிறுவனம் ஒப்பந்தமாகி உள்ளது. ‘இந்தியாவின் மிகப் பெரிய வணிக நிறுவனம்  இதில் இணைந்திருப்பது பெரு மகிழ்ச்சி’  என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று கூறியுள்ளார். 2022 சீசனில் புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைவதற்கு ஐபிஎல் நிர்வாகக் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் அடுத்த மாதம் 12, 13 தேதிகளில் நடைபெறும் என்று ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். * டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டெய்லர், மொத்தம் 112 டெஸ்டில் 7683 ரன் (அதிகம் 290, சராசரி 44.66, சதம் 19, அரை சதம் 35) மற்றும் 3 விக்கெட் எடுத்துள்ளார்.* புரோ கபடி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 43-23 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது.* இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் 2வது சுற்றில் விளையாட பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், அஷ்மிதா சாலிஹா தகுதி பெற்றுள்ளனர்.* இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவில் நேற்று தனது 49வது பிறந்தநாள் உற்சாகமாகக் கொண்டாடினார்.

🔊 Listen to this * தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்து தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. * ஐபிஎல் தொடரின் முக்கிய ஸ்பான்சராக  டாடா நிறுவனம் ஒப்பந்தமாகி உள்ளது. ‘இந்தியாவின் மிகப் பெரிய வணிக நிறுவனம்  இதில் இணைந்திருப்பது பெரு மகிழ்ச்சி’  என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று கூறியுள்ளார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *