சில்லி பாயின்ட்…

சில்லி பாயின்ட்…

* சிட்னியில் நடைபெற உள்ள ஏடிபி கோப்பை தொடருக்கான செர்பிய அணியில் இருந்து நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் விலகியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள அவர், தடுப்பூசி போட்டுக்கொண்டாரா இல்லையா? என்பதை தெரிவிக்க தயக்கம் காட்டி வருவது தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகிறது.* டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஆர்.அஷ்வின் 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.* 8 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, ஐ-லீக் கால்பந்து போட்டித் தொடர் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.* ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக பிரித்வி ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.* உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த கிடாம்பி ஸ்ரீகாந்த்துக்கு அமராவதியில் நேற்று நடந்த பாராட்டு விழாவில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ₹7 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் திருப்பதியில் பேட்மின்டன் பயிற்சி அகடமி அமைப்பதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.* அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடருடன் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஆஸி. நட்சத்திரம் சமந்தா ஸ்டோசர் (37 வயது) தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளார். இத்தொடரில் அவர் 20வது முறையாக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.* டி20 போட்டிகளில் ஆண்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பரிந்துரை பட்டியலில் ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து), வனிந்து ஹசரங்கா (இலங்கை), மிட்செல் மார்ஷ் (ஆஸி.), முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.* இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே செஞ்சுரியனில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தை, இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று மணியடித்து தொடங்கி வைத்தார்.

🔊 Listen to this * சிட்னியில் நடைபெற உள்ள ஏடிபி கோப்பை தொடருக்கான செர்பிய அணியில் இருந்து நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் விலகியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள அவர், தடுப்பூசி போட்டுக்கொண்டாரா இல்லையா? என்பதை தெரிவிக்க தயக்கம் காட்டி வருவது தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகிறது.* டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *