சில்லி பாயின்ட்…

சில்லி பாயின்ட்…

* பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு (49 வயது) கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.* ஆசிய கோப்பை யு19 ஒருநாள் போட்டித் தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் – இலங்கை, இந்தியா – வங்கதேசம் நாளை மோதுகின்றன. இறுதிப் போட்டி ஜன.1ம் தேதி நடைபெற உள்ளது.* ஆண்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பெற இந்திய ஸ்பின்னர் ஆர்.அஷ்வின், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூசி. வேகம் கைல் ஜேமிசன், இலங்கை தொடக்க வீரர் திமத் கருணரத்னே ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த நால்வரில் இருந்து விருதுக்கு தேர்வு  செய்யப்பட்ட வீரரின் பெயர் ஜன.24ம் தேதி அறிவிக்கப்படும்.* ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில். கேப்டன் ஜோ ரூட் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் வலியுறுத்தி உள்ளார்.* ஸ்பெயின் அணி முன்கள வீரர் பெரான் டாரெஸ் மான்செஸ்டர் சிட்டி அணியில் இருந்து விலகி பார்சிலோனா அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி உள்ளார்.* நடப்பு ஐஎஸ்எல் தொடரில் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் தவித்து வரும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோஸ் மேனுவல் டயஸ் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணி முன்னாள் கேப்டனும் துணை பயிற்சியாளருமான ரெனடி சிங் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.* பார்சிலோ கால்பந்து அணி நட்சத்திரம் ஜோர்டி அல்பாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. * நட்சத்திர வீரர் டொமினிக் தீம் (28 வயது, ஆஸ்திரியா) மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

🔊 Listen to this * பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு (49 வயது) கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.* ஆசிய கோப்பை யு19 ஒருநாள் போட்டித் தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் – இலங்கை, இந்தியா – வங்கதேசம் நாளை மோதுகின்றன. இறுதிப் போட்டி ஜன.1ம் தேதி நடைபெற உள்ளது.* ஆண்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பெற இந்திய ஸ்பின்னர் ஆர்.அஷ்வின், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூசி. வேகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *