சில்லிபாய்ன்ட்ஸ்

சில்லிபாய்ன்ட்ஸ்

  • 10

* சிட்னி கிளாசிக் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீராங்கனை பவுளா படோசா 6-3, 6-4 என நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டொம்ஜனோவிச்சை வீழ்த்தி  காலிறுதிக்கு முன்னேறினார்.* ஆஸி. ஓபன் ஆடவர் தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் இந்திய வீரர்  பிரஜ்னேஷ்  குணேஸ்வரன் 6-4, 6-4  என நேர் செட்களில்  கொலம்பியாவின் டேனியல் கலானை வீழ்த்தினார். எனினும், அடுத்த போட்டியில் 2-6, 6-7 (8-10) என நேர் செட்களில்  ஜெர்மனியின் மேக்ஸ்மிலியன் மார்டரரிடம் போராடி தோற்றார். * மகளிர் ஒற்றையர் தகுதிச் சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா  1-6, 0-6 என நேர் செட்களில்  உக்ரைனின் லெசியா சுரென்கோவிடம் வீழ்ந்தார்.* காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், தென் ஆப்ரிக்காவுடன் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளனர்.* யு-19 சிறுமியர் ஒற்றையர் பேட்மின்டன் தரவரிசையில் நம்பர் 1 அந்தஸ்தை பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை டஸ்னிம் மிர் பெற்றுள்ளார்.* ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளதாக ஆஸி. வேகம் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.* இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் 2வது சுற்றில் விளையாட சாய்னா, பிரனாய், லக்‌ஷியா தகுதி பெற்றுள்ளனர்.

AIARA

🔊 Listen to this * சிட்னி கிளாசிக் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீராங்கனை பவுளா படோசா 6-3, 6-4 என நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டொம்ஜனோவிச்சை வீழ்த்தி  காலிறுதிக்கு முன்னேறினார்.* ஆஸி. ஓபன் ஆடவர் தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் இந்திய வீரர்  பிரஜ்னேஷ்  குணேஸ்வரன் 6-4, 6-4  என நேர் செட்களில்  கொலம்பியாவின் டேனியல் கலானை வீழ்த்தினார். எனினும், அடுத்த போட்டியில் 2-6, 6-7 (8-10) என நேர் செட்களில்  ஜெர்மனியின் மேக்ஸ்மிலியன் மார்டரரிடம்…

Leave a Reply

Your email address will not be published.