‘சினிமா தயாரிச்சது குத்தமாய்யா’ நடிகர் உன்னி முகுந்தனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை ‘மின்னல்’ ரெய்டு

  • 7

மலையாள திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். அவர், `உன்னி முகுந்தன் பிலிம்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி முதன் முதலாக ‘மேப்படியன்’ என்ற சினிமாவை தயாரித்துள்ளார். அந்த சினிமாவில் கதாநாயகனாகவும் உன்னி முகுந்தன் நடித்திருகிறார். ஈராற்றுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சினிமாவுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. நல்லபடியாக செல்லும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகளை மேப்படியான் சினிமாவில் குடும்பக் கதையாக உருவாக்கியுள்ளாராம் உன்னி முகுந்தன். மேப்படியான் சினிமா ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சினிமா ப்ரமோஷன் நிகழ்ச்சியாக காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை ரோட் ஷோ நடத்தி வருகிறார் உன்னி முகுந்தன். ஜனவரி 1-ம் தேதி தொடங்கிய இந்த ரோட் ஷோ வரும் 10-ம் தேதி நிறைவுபெறுகிறது.

Also Read: “அந்த மூணு பேர் பயங்கரமா சிரிச்சாங்க; விஜயகாந்த் சாருக்கு கோபத்துல கண்ணு சிவந்திடுச்சு”-லிவிங்ஸ்டன்

மேப்படியான் சினிமா ப்ரமோஷன் ரோட் ஷோ

இந்த நிலையில்தான் பாலக்காடு ஒற்றப்பாலம் பகுதியில் அமைந்துள்ள உன்னி முகுந்தனின் வீட்டை ஒட்டி அமைந்துள்ள சினிமா கம்பெனியில் அமலாக்கத்துறை நேற்று ரெய்டு நடத்தியிருக்கிறது. கொச்சி மற்றும் கோழிக்கோடு யூனிடைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் சென்று, இரண்டு மணி நேரம் ரெய்டு நடத்தினர். மேப்படியான் சினிமா சம்பந்தமான பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சில புகார்கள் சென்றதால் ரெய்டு நடைபெற்றதாக முதலில் கூறப்பட்டது.

இந்த நிலையில ரெய்டு குறித்து நடிகர் உன்னி முகுந்தன் மீடியாக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். “நான் இப்போதுதான் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறேன். என் நிறுவனம் மூலம் மேப்படியான் படத்தைத் தயாரித்துள்ளேன். சினிமா தயாரித்த பணத்திற்கான சோர்ஸ் குறித்தும், கணக்குகள் பற்றியும் தெரிந்துகொள்வதற்காக அமலாக்கத்துறை வந்தது.

உன்னி முகுந்தன்

நான் சென்று கணக்குகளை அவர்களிடம் கொடுத்தேன். வேறு பிரச்னை எதுவும் இல்லை. அமலாக்கத்துறை விசாரணைக்கு நான் ஒத்துழைத்தேன், எல்லாம் பாசிட்டிவ்வாக இருந்தது. ஜனவரி 14-ம் தேதி அனைவரும் மேப்படியான் சினிமாவை பார்த்து, வெற்றிபெற வைக்க வேண்டும்” என்றார். ‘உன்னி யேட்டன் சினிமா தயாரிச்சது ஒரு குத்தமா, அதற்கெல்லாமா ரெய்டு விடுவாங்க’ என ஆவேசம் ஆகிறார்கள் உன்னி முகுந்தனின் ரசிகர்கள்.

🔊 Listen to this மலையாள திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். அவர், `உன்னி முகுந்தன் பிலிம்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி முதன் முதலாக ‘மேப்படியன்’ என்ற சினிமாவை தயாரித்துள்ளார். அந்த சினிமாவில் கதாநாயகனாகவும் உன்னி முகுந்தன் நடித்திருகிறார். ஈராற்றுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சினிமாவுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. நல்லபடியாக செல்லும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகளை மேப்படியான் சினிமாவில் குடும்பக் கதையாக உருவாக்கியுள்ளாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *