சமூக ஆர்வலர் சுதா பரத்வாஜ் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலை

புனே எல்கர் பரிஷத்தில் கடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டைத் தொடர்ந்து, மறுநாள் பீமா கோரேகானில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அதற்கு, மாநாட்டில் சமூகச் செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ், இடதுசாரி ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஏராளமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக டெல்லி, ஆந்திரா, சத்தீஸ்கர் உட்பட நாடு முழுவதுமிருந்து 2018-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 16 பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆரம்பத்தில் இந்த வழக்கை மகாராஷ்டிரா போலீஸார் விசாரித்துவந்த நிலையில், அதை தேசிய புலனாய்வு ஏஜென்சி தன்வசம் எடுத்து விசாரித்துவருகிறது.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவித விசாரணையும் இன்றி மும்பைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் நக்சலைட்களுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறையில் உயிரிழந்துவிட்டார். ஆந்திரக் கவிஞர் வரவரராவ் உடல்நிலையைக் காரணம் காட்டி தற்காலிக ஜாமீனில் இருக்கிறார்.

சுதா பரத்வாஜ்

இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக மும்பையிலுள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடந்த 1-ம் தேதி ஜாமீன் வழங்கியது. அதேசமயம், ஜாமீன் நிபந்தனைகளை தேசியப் புலனாய்வு ஏஜென்சி சிறப்பு நீதிமன்றம் தெரிவிக்கும் என்று தெரிவித்திருந்தது. மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தேசிய புலனாய்வு ஏஜென்சி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் மனுவைத் தள்ளுபடி செய்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தவிதத் தவறும் இருப்பதாகக் கருதவில்லை என்று தெரிவித்தது.

அதையடுத்து மும்பையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜாமீனில் வெளியில் செல்ல நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக மும்பையில் வசிக்க வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, சுதா பரத்வாஜ் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Also Read: நள்ளிரவு கைது… நீதிமன்ற அவமதிப்பு… சுதா பரத்வாஜ் கைதில் காவல்துறையின் அத்துமீறல்கள்!

🔊 Listen to this புனே எல்கர் பரிஷத்தில் கடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டைத் தொடர்ந்து, மறுநாள் பீமா கோரேகானில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அதற்கு, மாநாட்டில் சமூகச் செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ், இடதுசாரி ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஏராளமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக டெல்லி, ஆந்திரா, சத்தீஸ்கர் உட்பட நாடு முழுவதுமிருந்து 2018-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 16…