சதம் விளாசிய கவாஜா: டிக்ளேர் செய்த ஆஸி.

சதம் விளாசிய கவாஜா: டிக்ளேர் செய்த ஆஸி.

  • 10

சிட்னி: நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடும் கவாஜா  சதம் விளாசியதால் ஆஸி,  8 விக்கெட்  இழப்புக்கு 416ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்கிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது ஆஸி முதல் இன்னிங்சில் 46.5ஓவருக்கு 3 விக்கெட்களை இழந்து  126ரன் எடுத்திருந்தது.  இந்நிலையில் 2வது நாளான நேற்று   களத்தில் இருந்த   ஸ்மித் 4*, உஸ்மான் கவாஜா 3*ரன்னுடன் பொறுப்பாக முதல் இன்னிங்சை  தொடர்ந்தனர். அரைசதம் விளாசிய ஸ்மித் 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.  கேப்டன் கம்மின்ஸ்,   அலெக்ஸ்  அடுத்தடுத்து பவுலியன் திரும்பினர். சுமார் 28 மாதங்களுக்கு பிறகு அணியில் இடம் பிடித்த கவாஜா தனது 9வது சதத்தை  விளாசினார். அவர் 137 ரன்னில் ஆட்டமிழந்தார்.  அடுத்து இணை சேர்ந்த     மிட்செல் ஸ்டார்க் 34*, நாதன் லயன் 16* ரன் எடுத்திருந்த போது, ஆஸி ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அப்போது ஆஸி 134ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 416ரன் குவித்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் வேகம் ஸ்டூவர்ட் பிராடு 5 விக்கெட்களை அள்ளினார். சிக்கனமாக பந்து வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விக்கெட் எடுத்தார். அதனையடுத்து  முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 ஒவருக்கு விக்கெட் இழப்பின்றி 13ரன் எடுத்திருந்தது.  ஹசிப், கிரெவ்லி இருவரும் தலா 2* ரன் எடுத்துள்ளனர்.

🔊 Listen to this சிட்னி: நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடும் கவாஜா  சதம் விளாசியதால் ஆஸி,  8 விக்கெட்  இழப்புக்கு 416ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்கிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது ஆஸி முதல் இன்னிங்சில் 46.5ஓவருக்கு 3 விக்கெட்களை இழந்து  126ரன் எடுத்திருந்தது.  இந்நிலையில் 2வது நாளான நேற்று   களத்தில் இருந்த   ஸ்மித் 4*, உஸ்மான் கவாஜா 3*ரன்னுடன் பொறுப்பாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *