சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது

  • 15

சென்னை: சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இந்தாண்டின் முதல் நாள் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இன்றும், நாளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அரசு தலைமை கொறடா கோவி செழியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். மக்கள் நலன் சார்ந்த என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும். தொகுதி மக்கள் சம்பந்தமாக என்னென்ன கேள்விகளை எழுப்ப வேண்டும். எதிர்க் கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட வலியுறுத்த வேண்டும். பொதுமக்கள் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று அப்போது மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

AIARA

🔊 Listen to this சென்னை: சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இந்தாண்டின் முதல் நாள் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இன்றும், நாளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு திமுக…

Leave a Reply

Your email address will not be published.