சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசினாரா..? – வைரல் ஆடியோ குறித்து செல்லூர் ராஜூ விளக்கம்!

சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுவரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சசிகலாவிடம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் ராஜன், தற்போது குவைத்தில் வேலை பார்த்துவருகிறார். சசிகலாவின் தீவிர ஆதரவாளரான இவர், சசிகலாவுக்கு ஆதரவாக தென் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்களை போனில் தொடர்புகொண்டுப் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டுவருகிறார்.

செல்லூர் ராஜூ

அந்த வகையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பேசியதாக ஆடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோவில், “சசிகலாவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டுலதான் நாங்களும் இருக்கோம். இது தொடர்பா மதுரையில ஆலோசனைக் கூட்டம் நடத்தப்போறேன்” என செல்லூர் ராஜூ பேசியதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த ஆடியோ அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சுமார் 2.45 நிமிடம் நீளும் அந்த ஆடியோவில், சசிகலா ஆதரவு நிலைப்பாடு குறித்தும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் செல்லூர் ராஜூ பேசியதாக முன்னதாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் அ.தி.மு.க-வில் பூகம்பத்தை வெடிக்கச் செய்திருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அது தன் குரலே இல்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடைய குரல் அல்ல.

சசிகலா

வேண்டுமென்றே கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் கட்சியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக, என்னைப்போல் பேசி ஆடியோ வெளியிட்டிருக்கிறார்கள். யாரோ என்னைப்போல் பேச முயற்சி செய்திருக்கிறார். அந்த ஆடியோவை வெளியிட்டவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சி நபர்கள் யாரேனும் அ.தி.மு.க-வின் ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கில் இப்படிச் செய்திருக்கலாம். எனக்கும் அந்த ஆடியோவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அ.தி.மு.க-வில் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். இது குறித்து கட்சித் தலைமையிடம் கலந்தாலோசித்த பிறகு, காவல்துறையிடம் புகார் அளிக்கவிருக்கிறேன்” எனக் கூறினார்.

Also Read: அதிமுக அலுவலகத்தில் அதகள மோதல் ஆரம்பம்?! – திடீர் விசிட் வருவாரா சசிகலா?

AIARA

🔊 Listen to this சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுவரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சசிகலாவிடம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் ராஜன், தற்போது குவைத்தில் வேலை பார்த்துவருகிறார். சசிகலாவின் தீவிர ஆதரவாளரான இவர், சசிகலாவுக்கு ஆதரவாக தென் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்களை போனில் தொடர்புகொண்டுப் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டுவருகிறார். செல்லூர் ராஜூ அந்த வகையில், முன்னாள்…