கோவை: லிவிங் டுகெதர் உறவில் தகராறு?! – காதலன்மீது ஆசிட் ஊற்றி கத்தியால் குத்திய காதலி
கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில், கோவை அவிநாசி சாலை அருகே உள்ள ஓர் அபார்ட்மென்டில் தங்கிவந்ததாகக் கூறப்படுகிறது.

Also Read: Made-in கோவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
சமீபகாலமாக, அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்திருக்கிறது. ராகேஷ்மீது ஜெயந்தி கடும் கோபத்தில் இருந்திருக்கிறார்.
இந்நிலையில், தன் ஹேண்ட் பேக்கில் மறைத்துவைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராகேஷ் முகத்தின் மீது வீசியிருக்கிறார் ஜெயந்தி. மேலும், அதே வேகத்தில் ராகேஷைக் கத்தியாலும் குத்தியிருக்கிறார். இதில் ராகேஷ் நிலை தடுமாறி மயங்கியிருக்கிறார்.

இதையடுத்து, தூக்க மாத்திரை சாப்பிட்டு ஜெயந்தியும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இருவரையும் மீட்டு போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக ராகேஷ், ஜெயந்தி இரண்டு பேர் மீதும் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் எத்தனை ஆண்டுப் பழக்கம், என்ன பிரச்னை போன்ற தகவல்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

🔊 Listen to this கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில், கோவை அவிநாசி சாலை அருகே உள்ள ஓர் அபார்ட்மென்டில் தங்கிவந்ததாகக் கூறப்படுகிறது. லிவிங் டுகெதர்! Also Read: Made-in கோவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! சமீபகாலமாக, அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்திருக்கிறது. ராகேஷ்மீது ஜெயந்தி கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில், தன் ஹேண்ட் பேக்கில் மறைத்துவைத்திருந்த…