கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: தேனி மாவட்ட வீரர்கள் வெற்றி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தேனி மாவட்ட வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளிடையே பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோவையை சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பாக மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.15 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் 15 ஓவர் முடிவில் தேனி மாவட்ட அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களும், கன்னியாகுமரி அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களையும் எடுத்து.வெற்றி தோல்வியை கடந்து போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பரிசாக ரூ.40,000 மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை பகிர்ந்து அளிக்கப்பட்டது. பல்வேறு விளையாட்டுகளில் சாதித்து வரும் பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்து அனைத்து பள்ளி மாணவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த போட்டி நடத்தப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

🔊 Listen to this கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தேனி மாவட்ட வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளிடையே பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோவையை சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பாக மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.15 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை…