“கோவை மக்கள் பதற்றமடைய வேண்டாம்… ஆனால்..!” – கொரோனா குறித்து எச்சரிக்கும் ஆட்சியர்

  • 6

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவையில் கடந்தாண்டு கொரோனா 2-வது அலையில் தினசரி 4,700 வரை பாதிப்பு இருந்தது.

கோவை ஆட்சியர் சமீரன்

Also Read: `முதல்வர் கேட்பார்… கொரோனா விழிப்பு உணர்வு கூட்டம் எனக் கூறித் தப்பித்துவிடுவேன்!’ – அன்பில் மகேஷ்

அது படிப்படியாக குறைந்து 72 ஆக வந்தது. ஆனால், தற்போது ஒரே நாளில் (நேற்று) பாதிப்பு எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளன. பொது இடங்களில் கொரோனா விதிகளை கடைபிடிக்காவிடின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 2,730 படுக்கைகள், 99 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் கொள்ளளவு 2,750 ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேட்டர் தயார் நிலையில் உள்ளன. சமூக பரவல் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கோவை

பொது இடங்களுக்கு செல்லும்போது, மக்கள் கட்டாயம் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும். தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் பதற்றமடைய வேண்டாம். அதேநேரத்தில் மிகவும் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசின் கொரோனா விதி முறைகளை பின்பற்ற வேண்டும். லேசான வைரஸ் தொற்று மற்றும் அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும். அவர்களை கட்டுப்பாட்டு அறை மூலமாக தொடர்ந்து கண்காணிப்போம்.

கொரோனா

கேரளாவில் இருந்து பேருந்துகள் மூலம் கோவை வரும் பயணிகளை சோதனைச்சாவடியில் பரிசோதிக்க முடியாது. எனவே, பயணிகளுக்கு பேருந்து நிலையங்களில் பரிசோதனை செய்யப்படும். கோவையில் 9-ம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு, வேறு ஒரு தேதியில் நடைபெறும்” என்றார்.

🔊 Listen to this தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவையில் கடந்தாண்டு கொரோனா 2-வது அலையில் தினசரி 4,700 வரை பாதிப்பு இருந்தது. கோவை ஆட்சியர் சமீரன் Also Read: `முதல்வர் கேட்பார்… கொரோனா விழிப்பு உணர்வு கூட்டம் எனக் கூறித் தப்பித்துவிடுவேன்!’ – அன்பில் மகேஷ் அது படிப்படியாக குறைந்து 72…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *