கோவை: நள்ளிரவில் பெரியார் சிலை அவமதிப்பு! – சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை

  • 6

கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் இருக்கிறது. அந்தப் படிப்பகம் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,அந்த பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும், காவி நிற பொடி தூவியும் அவமதிப்பு செய்துள்ளனர்.

பெரியார் சிலை அவமதிப்பு

Also Read: 100 கோடியில் பெரியார் சிலை; படேல் சிலையை எதிர்த்தவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்?!

இதைக் கண்ட பொது மக்கள், பெரியார் படிப்பகத்தை சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு திரண்ட திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே கடந்தாண்டு கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிப்பு செய்திருந்தனர். இது திராவிட இயக்கங்கள், பெரியார் உணர்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.

இதனிடையே, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர். “சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்து வருகிறோம்.

சிசிடிவி

விரைவில் மர்ம நபரை கைது செய்வோம்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலை முன்பு பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

AIARA

🔊 Listen to this கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் இருக்கிறது. அந்தப் படிப்பகம் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,அந்த பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும், காவி நிற பொடி தூவியும் அவமதிப்பு செய்துள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு Also Read: 100 கோடியில் பெரியார் சிலை; படேல் சிலையை எதிர்த்தவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்?! இதைக் கண்ட பொது மக்கள், பெரியார் படிப்பகத்தை சேர்ந்தவர்களுக்கு…

Leave a Reply

Your email address will not be published.