கோவாவுடன் இன்று பலப்பரீட்சை சென்னையின் எப்சி 5வது வெற்றி பெறுமா?

கோவாவுடன் இன்று பலப்பரீட்சை சென்னையின் எப்சி 5வது வெற்றி பெறுமா?

  • 3

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 52வது லீக் போட்டியில் ஈஸ்ட்பெங்கால்-மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வலுவான மும்பைக்கு பெங்கால் கடும் சவால் அளித்தது. இதனால் இறுதிவரை அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி 0-0 டிராவில் முடிந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா-ஒடிசா எப்சி, இரவு 9.30மணிக்கு எப்சி கோவா-சென்னையின் எப்சி அணிகள் மோதுகின்றன. சென்னை 9 போட்டியில் 4ல் வெற்றி, 2 டிரா, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இன்று 5வது வெற்றிபெறும் முனைப்பில் களம் இறங்குகிறது. கோவா 9 போட்டியில் 2ல் வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என 9 புள்ளியுடன் 9வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் இதற்கு முன் 19 முறை மோதி உள்ளன. இதில் கோவா 9, சென்னை 8ல் வென்றுள்ளன. 2 போட்டி சமனில் முடிந்துள்ளது.

AIARA

🔊 Listen to this கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 52வது லீக் போட்டியில் ஈஸ்ட்பெங்கால்-மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வலுவான மும்பைக்கு பெங்கால் கடும் சவால் அளித்தது. இதனால் இறுதிவரை அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி 0-0 டிராவில் முடிந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா-ஒடிசா எப்சி, இரவு…

Leave a Reply

Your email address will not be published.