கொளத்தூர் தொகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

கொளத்தூர் தொகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். கொளத்தூர் தொகுதி திருவிக நகர் பேருந்து நிலையத்தில் திமுகவில் இணைவதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாமை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை துவக்கி வைத்தார். மேலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் படிவ விண்ணப்ப தாளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார். அப்போது, நடந்து சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலினுடன் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள மறைந்த  அர்ச்சகர் ரவிசந்திரன் இல்லத்துக்கு நேரடியாக முதல்வர் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களுடன் தேனீர் குடித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி நாகராஜன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

🔊 Listen to this சென்னை திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். கொளத்தூர் தொகுதி திருவிக நகர் பேருந்து நிலையத்தில் திமுகவில் இணைவதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாமை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை துவக்கி வைத்தார். மேலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் படிவ விண்ணப்ப தாளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார். அப்போது, நடந்து சென்று உறுப்பினர் சேர்க்கையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *