கொரோனா பரவல் எதிரொலியாக உலக அழகிப் போட்டி திடீர் ஒத்திவைப்பு: போட்டியாளர் பாதுகாப்பு கருதி நடவடிக்கை

கரீபியன்: இந்திய அழகி உள்பட போட்டியாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதால் நடப்பாண்டின் உலக அழகி இறுதிப்போட்டி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் உலக அழகியை தேர்வு செய்யும் இறுதி போட்டி, கரீபியன் தீவில் உள்ள பியோடோரிகோ நகரில் வியாழன் அன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் போட்டிகளில் பங்கேற்கும் அழகிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றதில் இந்திய அழகி மானசா வாரணாசி உள்பட சிலருக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எஞ்சிய போட்டியாளர்கள், நடுவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி இறுதி போட்டி ஒத்திவைக்கப்படுவதக சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் உடன் போட்டிக்கு முந்தைய தினத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொற்றுக்கு ஆளாகியுள்ள மானசா வாரணாசி, பியோடோரிகோ நகரில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையில் அவர் முழு உடல்நலம் பெற்ற பின்னர், நாடு திரும்புவார் என்று இந்திய அழகி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானசா வாரணாசி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

🔊 Listen to this கரீபியன்: இந்திய அழகி உள்பட போட்டியாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதால் நடப்பாண்டின் உலக அழகி இறுதிப்போட்டி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் உலக அழகியை தேர்வு செய்யும் இறுதி போட்டி, கரீபியன் தீவில் உள்ள பியோடோரிகோ நகரில் வியாழன் அன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் போட்டிகளில் பங்கேற்கும் அழகிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றதில் இந்திய அழகி மானசா வாரணாசி உள்பட சிலருக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எஞ்சிய போட்டியாளர்கள், நடுவர்கள் நிகழ்ச்சி…