கொரோனா அச்சம்: சாணிப்பால் குடித்து தற்கொலைக்கு முயன்ற குடும்பம்; இருவர் பலி – மதுரையில் சோகம்!

  • 5

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அருகே எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் கணவர் பெயர் நாகராஜன். இவர்களது மகள்கள் அனிதா, ஜோதிகா (23), மகன் சிபிராஜ் (13). லட்சுமியின் மகள் அனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஜோதிகாவுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். அவர் தன் கணவருடன் தனியாக வசித்துவந்தார்.

இந்த நிலையில், லட்சுமியின் கணவர் நாகராஜ் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் லட்சுமி மன விரக்தியிலிருந்து வந்தார். கணவரை இழந்த நிலையில், குடும்பத்தின் நிலை குறித்த அச்சத்தில் மூழ்கிக்கிடந்திருக்கிறார் லட்சுமி. அதனால், லட்சமியை கவனித்துக்கொள்ள ஜோதிகா தன் மகனுடன் அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜோதிகாவுக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் வந்திருக்கிறது.

கொரோனா வைரஸ்

அதனால், லட்சுமி அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதை அறிந்து அதிர்ச்சியடைந்த லட்சுமி, ஏற்கெனவே மகள் மற்றும் கணவர் இறந்து விட்ட நிலையில், கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி, நேற்றிரவு சாணிப்பால் எனப்படும் `குருனை’ மருந்தை தன்னுடைய மகள் ஜோதிகா, ஜோதிகாவின் மகன் மற்றும் தன் மகனுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இந்த நிலையில், இன்றுகாலை லட்சுமியின் வீடு வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். லட்சுமியின் வீட்டுக்கு விரைந்த போலீஸார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு, லட்சுமி குடும்பத்துடன் மயங்கிக் கிடந்தார். அதையடுத்து, அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்கொலை

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் லட்சுமியின் மகள் ஜோதிகாவும், அவர் மகனும் உயிரிழந்தனர்.

லட்சுமியும் அவரின் மகனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக பெண் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: உசிலம்பட்டி: பெண் சிசுக்கொலை? தம்பதி தலைமறைவு! – போலீஸார் தீவிர விசாரணை!

AIARA

🔊 Listen to this மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அருகே எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் கணவர் பெயர் நாகராஜன். இவர்களது மகள்கள் அனிதா, ஜோதிகா (23), மகன் சிபிராஜ் (13). லட்சுமியின் மகள் அனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஜோதிகாவுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். அவர் தன் கணவருடன் தனியாக வசித்துவந்தார். இந்த நிலையில், லட்சுமியின் கணவர் நாகராஜ் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் லட்சுமி மன விரக்தியிலிருந்து…

AIARA

🔊 Listen to this மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அருகே எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் கணவர் பெயர் நாகராஜன். இவர்களது மகள்கள் அனிதா, ஜோதிகா (23), மகன் சிபிராஜ் (13). லட்சுமியின் மகள் அனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஜோதிகாவுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். அவர் தன் கணவருடன் தனியாக வசித்துவந்தார். இந்த நிலையில், லட்சுமியின் கணவர் நாகராஜ் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் லட்சுமி மன விரக்தியிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published.