குமரி: ரூ.70 லட்சத்துடன் அரசுப் பேருந்தில் சிக்கிய ‘குருவி’ – விசாரணை வளையத்தில் புதுப்பேட்டை ஆதம்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக மது, போதைப் பொருடள்கள் கடத்திச் செல்வதைத் தடுக்கும் வகையில் தமிழக – கேரளா எல்லைகள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. பெரிய கடத்தல்களைத் தடுக்க தமிழக, கேரள போலீஸார் இணைந்து வாகன சோதனை நடத்துவதும் வழக்கம். அந்த வகையில் கேரள எல்லைப் பகுதியான படந்தாலுமூடு பகுதியில் தமிழக, கேரள போலீஸார் இணைந்து நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரள அரசுப் பேருந்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பையுடன் இருந்த நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரின் பதில் திருப்திகரமாக இல்லாததால், அவரின் பேக்கை சோதனை செய்தனர். அதில் கட்டுக் கட்டாக இரண்டாயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் அதில் 70 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் அந்த நபரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

போலீஸ் பிடியில் ஆதம்

அப்போது, அவர் சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆதம் (45) என்பது தெரியவந்தது. மேலும், அவரின் மொபைல்போனை ஆய்வுசெய்தபோது அமெரிக்கன் டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை செய்ததற்கான சில ஆவணங்களும் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக அவரிடம் களியக்காவிளை போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

70 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் என்பதால் இது குறித்து வருமான வரித்துறையின் திருநெல்வேலியைச் சேர்ந்த விங் விசாரணை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பணம் சென்னையிலிருந்து கேரளாவுக்குக் கொண்டுச் செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. ஏன் கன்னியாகுமரி வழியாக கேரளா செல்ல முயன்றார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

பை நிறைய எடுத்துச் செல்லப்பட்ட பணம்

ஆதம் என்பவர் பணத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு கடத்திச் செல்லும் ‘குருவி’ போன்று செயல்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது. இதற்காக அவருக்கு கமிஷன் கிடைக்குமாம். போலீஸ் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் கன்னியாகுமரி வழியாக கேரளா செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் யாருடையது என்றும், இது போன்று எத்தனை முறை ஆதம் பணம் கொண்டு சென்றிருக்கிறார், வேறு எந்த மாநிலங்களுக்கெல்லாம் பணத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

AIARA

🔊 Listen to this கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக மது, போதைப் பொருடள்கள் கடத்திச் செல்வதைத் தடுக்கும் வகையில் தமிழக – கேரளா எல்லைகள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. பெரிய கடத்தல்களைத் தடுக்க தமிழக, கேரள போலீஸார் இணைந்து வாகன சோதனை நடத்துவதும் வழக்கம். அந்த வகையில் கேரள எல்லைப் பகுதியான படந்தாலுமூடு பகுதியில் தமிழக, கேரள போலீஸார் இணைந்து நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரள அரசுப் பேருந்தில் சந்தேகத்துக்கு…