குடியரசு தினவிழா அணிவகுப்பு: மேற்கு வங்க, தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு! – என்ன காரணம்?

  • 1

தென்மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளுக்கும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் சார்ப்பில் அணிவகுப்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவப்படங்கள் அந்த அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4-வது சுற்று வரை சென்ற நிலையில், வ.உ.சி, வேலு நாச்சியார் ஆகியோர் சர்வதேச தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை எனக்கூறி நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தின விழாவில் தமிழக ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுவதாகவும், இதை பற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுத வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாககி உள்ளது. இந்த ஆண்டுக்கான அலங்கார ஊர்திகள் இறுது செய்யப்பட்டுவிட்டதாகவும் இதனால் நிராகரிக்கப்பட்ட மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இந்த முறை கலந்து கொள்ள முடியாது எனவும் கூறப்படுகிறது.

அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தினத்தன்று மேற்குவங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி ஜனவரி 26-ம் தேதி அணி வகுப்பு நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் டெல்லியில் அணிவகுப்பும் நடைபெற இருந்தது. இந்த நிகழ்வில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும், அந்த மாநிலங்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகளை அடையாளப்படுத்துவது வழக்கம்.

அந்தந்த மாநிலங்களின் முக்கிய தலைவர்களை நினைவுகூறும் விதமாக அலங்கார ஊர்திகள் அலங்காரம் செய்யப்படும். இந்த ஆண்டு டெல்லியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக முதலில் தகவல் வெளியாக மேற்கு வங்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மம்தா பானர்ஜி

தற்போது மேற்கு வங்க ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்குவங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மேற்குவங்கம் முன்னணியில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் பிரிவினையின் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய விலையை செலுத்தியுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, மேற்கு வங்கத்தின் சார்பில் அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகளில் சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு

மேலும் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர், மற்றும் பல தேச பக்தர்களின் உருவப்படங்களை ஊர்தி சுமந்து செல்ல இருக்கிறது. இதனால் மத்திய அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்து குடியரசு தினவிழாவில் மேற்கு வங்க அலங்கார ஊர்திகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் மம்தா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்குவங்காள அலங்கார ஊர்திகள் பங்கேற்க 2015, 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: மேற்குவங்கம்: தேர்தல் முடிவுகளால் வெடித்த மோதல்; 14 பேர் பலி! – பதற்றமான சூழலில் பதவியேற்ற மம்தா

AIARA

🔊 Listen to this தென்மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளுக்கும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் சார்ப்பில் அணிவகுப்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவப்படங்கள் அந்த அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4-வது சுற்று வரை சென்ற நிலையில், வ.உ.சி, வேலு நாச்சியார் ஆகியோர் சர்வதேச தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை எனக்கூறி நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. மிகவும் பிரபலமான…

AIARA

🔊 Listen to this தென்மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளுக்கும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் சார்ப்பில் அணிவகுப்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவப்படங்கள் அந்த அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4-வது சுற்று வரை சென்ற நிலையில், வ.உ.சி, வேலு நாச்சியார் ஆகியோர் சர்வதேச தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை எனக்கூறி நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. மிகவும் பிரபலமான…

Leave a Reply

Your email address will not be published.