“காதலித்தவர் ஏமாற்றிவிட்டார், அதனால்…!” – சிசுக்கொலையில் இளம்பெண் பகீர் வாக்குமூலம்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டுவருகிறது. அதன் வளாகத்தில் கடந்த 4-ம் தேதி கழிவறைத் தொட்டியில் கொலைசெய்யப்பட்ட பெண் சிசுவின் உடல் கிடந்தது. கழிவறையைச் சுத்தம் செய்யச் சென்ற ஊழியர்கள் குழந்தையின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக டாக்டர்கள் இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட பெண்

அதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் குறித்த பட்டியல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு விசாரணை நடத்தினர். இதில் தஞ்சாவூர், பூதலூர் அருகே ஆலக்குடி வடக்குத்தெருவைச் சேர்ந்த பிரியதர்ஷினி (23) என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “பிரியதர்ஷினி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திருப்பூரில் வேலை செய்துவந்திருக்கிறார். அப்போது வாலிபர் ஒருவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் நெருங்கிப் பழகியதால் பிரியதர்ஷினி கர்ப்பமடைந்துவிட்டார். இந்த நிலையில், அந்த வாலிபர் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

குழந்தை கொலையில் போலீஸ் விசாரணை

அதனால் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்த பிரியதர்ஷினி சொந்த ஊருக்கு வந்துவிட்டார். பின்னர் பிரசவவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தன் பெற்றோருடன் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் வயிற்றுவலி எனக் கூறி சிகிச்சைக்காகச் சேர்ந்திருக்கிறார். அவருக்கு உதவியாக பிரியதர்ஷினியின் தந்தையும் சென்றிருக்கிறார்.

கழிவறைக்குச் சென்ற பிரியதர்ஷினிக்கு அங்கேயே குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையை விரும்பாத அவர், தொப்புள்கொடியைக்கூட அகற்றாமல், கழிவறைத் தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்திருக்கிறார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிவறைக்குள் இருந்துவிட்டு வெளியே வந்த பிரியதர்ஷினி டாக்டர்களிடம் தெரிவிக்காமல் நேராக வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

மருத்துவக் கல்லூரி

சிசிடிவி-யில் பதிவான காட்சிகள், சிகிச்சை பெறுபவர்களின் பதிவேடு ஆகியவற்றைக்கொண்டு விசாரணை செய்ததில் பெண் சிசுவைக் கொலை செய்தது பிரியதர்ஷினி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, அவரைக் கைதுசெய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” என்றனர்.

Also Read: தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை கழிவறைத் தொட்டிக்குள் பெண் சிசுக்கொலை! – சிசிடிவி மூலம் விசாரணை

🔊 Listen to this தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டுவருகிறது. அதன் வளாகத்தில் கடந்த 4-ம் தேதி கழிவறைத் தொட்டியில் கொலைசெய்யப்பட்ட பெண் சிசுவின் உடல் கிடந்தது. கழிவறையைச் சுத்தம் செய்யச் சென்ற ஊழியர்கள் குழந்தையின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக டாக்டர்கள் இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட பெண் அதையடுத்து, மருத்துவக்…