கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

  • 4

சென்னை: கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் 2022ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கில் தொடங்கியது. காலை 9.49 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவை கூட்ட வளாகத்துக்கு வந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். மேலும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கவர்னரை சபாநாயகர் அப்பாவு அழைத்துச் சென்றார். அப்போது தமிழக போலீசார் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சரியாக காலை 10 அளவில் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தனது சட்டப்பேரவை உரையை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது விசிக சட்டப்பேரவை கட்சித் தலைவர் சிந்தனைச் செல்வன் எழுந்து கவர்னர் இந்த உரையை படிக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார். இருந்தபோதும் கவர்னர் தொடர்ந்து உரையை படித்துக் கொண்டிருந்தார். இதனால் விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர், கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம். 6 மாதமாக நீட் மசோதாவை கிடப்பில் போட்டுள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து, சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஏதோ ஒரு கருத்தை தெரிவிக்க முயன்றார். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தொடர்ந்து அவர் 4 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டே இருந்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தனக்கு பேச வாய்ப்பு அளிக்காததால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சட்டப்பேரவைக் கூட்டம் நடந்தது.

🔊 Listen to this சென்னை: கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் 2022ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கில் தொடங்கியது. காலை 9.49 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவை கூட்ட வளாகத்துக்கு வந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *