கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியை வெட்டிக்கொன்றேன்-காதல் கணவன் பரபரப்பு வாக்குமூலம்

சேந்தமங்கலம் : புதுச்சத்திரம் அருகே, கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவியை வெட்டிக்கொன்றதாக மரம் வெட்டும் தொழிலாளி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த நவணி பகுதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி தமிழ்ச்செல்வன்(25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த நந்தினி(22) என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் கண்ணூர்பட்டியை சேர்ந்த ரமேஷ்(30) என்பவருடன், நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தமிழ்ச்செல்வன் இல்லாத நேரத்தில், இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். நந்தினி அடிக்கடி நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததை கண்டு சந்தேகமடைந்த தமிழ்ச்செல்வன், யாரிடம் அடிக்கடி போன் பேசுகிறாய் எனக் கேட்டு மனைவியை கண்டித்துள்ளார். அப்போது ரமேசுடன் அவருக்கு இருந்த கள்ளத்தொடர்பு தெரியவந்தது. இதையடுத்து கள்ளத்தொடர்பை கைவிட்டு விடும்படி மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் தமிழ்ச்செல்வனுக்கு தெரியாமல் ரமேசுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை, தமிழ்ச்செல்வன் குழந்தைக்கு பால் வாங்கி வந்த போது, நந்தினி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து அவர்  செல்போனை வாங்கிப் பார்த்த போது, நந்தினி ரமேசுடன் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், மனைவியை சரமாரியாக தாக்கியதுடன், அவரை கழுத்தில் வெட்டினார். இதில் படுகாமடையந்தவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தமிழ்ச்செல்வன் தப்பியோடி விட்டார்.இதுகுறித்த தகவலறிந்து வந்த புதுச்சத்திரம் போலீசார், வழக்குபதிவு நேற்று தமிழ்ச்செல்வனை ஆண்டகளூர் கேட் அருகே கைது செய்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலம் விபரம்: நந்தினி மளிகை பொருட்கள் வாங்க சென்ற போது கடை உரிமையாளர் ரமேசுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கள்ளத்தொடர்பை கைவிடும்படி பலமுறை கண்டித்தேன். அதையும் மீறி செல்போனில் இருவரும் பேசி வந்தனர். சம்பவத்தன்று நான் குழந்தைக்கு பால் வாங்கி வந்தபோது நந்தினியை காணவில்லை. அவர் பாத்ரூமில் இருந்தபடி, சுமார் ஒரு மணி  நேரம் வரை ரமேசுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். சந்தேகம் ஏற்பட்டதால்,மளிகை கடைக்கு சென்று பார்த்தபோது, ரமேஷ் எனது மனைவி நந்தினியுடன் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த நான், அரிவாளால் வெட்டினேன், இதல் அவள் இறந்துவிட்டாள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

🔊 Listen to this சேந்தமங்கலம் : புதுச்சத்திரம் அருகே, கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவியை வெட்டிக்கொன்றதாக மரம் வெட்டும் தொழிலாளி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த நவணி பகுதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி தமிழ்ச்செல்வன்(25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த நந்தினி(22) என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் மளிகைக்கடை…