கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 11 சவரன் கொள்ளை

சென்னை: வியாசர்பாடி மெகஷின்புரம் ஆறுமுகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஜான்சன் (45). சென்னை மாவட்ட கலெக்டரிடம் தபேதராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 30ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் காலை வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், கம்மல், செயின் என 11 சவரன் தங்க நகைகள், 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

AIARA

🔊 Listen to this சென்னை: வியாசர்பாடி மெகஷின்புரம் ஆறுமுகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஜான்சன் (45). சென்னை மாவட்ட கலெக்டரிடம் தபேதராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 30ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் காலை வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், கம்மல், செயின் என…