கர்நாடகாவில் ஒமிக்ரான்… உஷார் நிலையில் தமிழக எல்லைகள்!

உருமாறிய கொரோனா வரைஸாக அறிவிக்கப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் தொற்று நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடக மாநிலத்தில் இரண்டு நபர்களுக்குக் கண்டறியப்பட்டது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சமீபத்தில் கர்நாடகா மாநிலம் திரும்பியவர்கள் சிலர் தலைமறைவாகியிருப்பதால் அவர்களைத் தேடும் பணியில் அரசுத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்‌. இதனால் கர்நாடக மாநில மக்கள் ஒமிக்ரான் வைரஸ் பதற்றத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில், அண்டை மாவட்டமான நீலகிரியில் இருக்கும் சோதனைச்சாவடிகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு, 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

கொரோனா

ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், “நீலகிரி மாவட்டம் கேரளா, கர்நாடக மாநில எல்லைகளில் இருப்பதால், இரு மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரள மாநில எல்லையில் உள்ள தாளூர், நாடுகாணி, சோலாடி, பாட்டவயல் ஆகிய சோதனைச்சாவடிகளிலும், கர்நாடகா – தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கக்கநல்லா சோதனைச்சாவடியிலும் மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு டாக்டர் தலைமையில் இந்தக் குழு 24 மணி நேரமும் பணியில் இருக்கும்.

இந்த மருத்துவக்குழுவினர் வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் என அனைவரையும் பரிசோதனை செய்வர். வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு பாதிப்பு இருந்தால், அவர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள். வெளி நாடுகளிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருபவர்கள் குறித்தும் ஆய்வு செய்துவருகிறோம். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு இருந்தால், அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, எட்டு நாள்கள் கண்காணிக்கப்படுவார்கள். நீலகிரி மாவட்டத்தில் தற்போது கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் 2,000 பேர் வீதம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

அம்ரித் ஐ.ஏ.எஸ்

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகள் ஐந்து நாள்கள் வரை மூடப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் நபர்களைத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம். நீலகிரி மாவட்டத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள் உள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை”என்றார்.

🔊 Listen to this உருமாறிய கொரோனா வரைஸாக அறிவிக்கப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் தொற்று நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடக மாநிலத்தில் இரண்டு நபர்களுக்குக் கண்டறியப்பட்டது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சமீபத்தில் கர்நாடகா மாநிலம் திரும்பியவர்கள் சிலர் தலைமறைவாகியிருப்பதால் அவர்களைத் தேடும் பணியில் அரசுத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்‌. இதனால் கர்நாடக மாநில மக்கள் ஒமிக்ரான் வைரஸ் பதற்றத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில், அண்டை மாவட்டமான நீலகிரியில் இருக்கும் சோதனைச்சாவடிகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு, 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…