கரூர்: சட்டவிரோதமாக கஞ்சா விற்ற இளைஞர் – குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்த போலீஸார்!

  • 11

கரூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதும், கஞ்சா விற்பனை செய்வதில் பலரும் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் தவறான வழிக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக, கரூர் மாவட்ட போலீஸார், கரூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்களையும், கஞ்சா விற்பனை செய்பவர்களையும் தடுக்கும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுக்க கஞ்சா கடத்தலில் ஈடுபவர்களை கண்காணிக்க, தனிப்படை போலீஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கரூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த அரவக்குறிச்சி அருகே உள்ள புதுசீத்தப்பட்டி காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் திவாகர் (25) என்ற இளைஞரை கரூர் நகர காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

திவாகர்கைது

அந்த இளைஞரிடம் இருந்த 2.150 கிலோ அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை செய்ததாக, அந்த இளைஞரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். கஞ்சா விற்றதாக கைதுசெய்யப்பட்ட திவாகர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: “சுங்கச்சாவடியை ரத்துசெய்யப் பரிந்துரைக்க நேரிடும்!” – எச்சரிக்கும் கரூர் ஆட்சியர்

AIARA

🔊 Listen to this கரூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதும், கஞ்சா விற்பனை செய்வதில் பலரும் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் தவறான வழிக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக, கரூர் மாவட்ட போலீஸார், கரூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்களையும், கஞ்சா விற்பனை செய்பவர்களையும் தடுக்கும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுக்க கஞ்சா கடத்தலில் ஈடுபவர்களை கண்காணிக்க, தனிப்படை போலீஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில்,…

Leave a Reply

Your email address will not be published.