கட்டாய கருக்கலைப்பு; கணவர் வீட்டார் சித்ரவதை – குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய பெண்!

மும்பையின் மத்திய பகுதியிலிருக்கும் காலாசவுக்கியில் வசிப்பவர் நிஷா ஷிண்டே (36). இவருக்கு மூன்று மாதப் பெண் குழந்தை ஒன்று இருந்தது. அந்தக் குழந்தையைச் சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக நிஷா அண்மையில் போலீஸில் புகார் செய்திருந்தார். தான் தனியாக இருந்தபோது வந்த சில பெண்கள் தன்மீது மயக்க மருந்தைத் தெளித்துவிட்டு குழந்தையைக் கடத்திசென்றுவிட்டதாக அவர் போலீஸாரிடம் கூறியிருந்தார்.

பெண் குழந்தை

அதையடுத்து, போலீஸார் உடனே விரைந்து செயல்பட்டு நிஷா வசிக்கும் கட்டடத்தைச் சுற்றியிருக்கும் அனைத்துக் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ஆனால், அதில் உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து புகார் கொடுத்த பெண்ணையும், அவர் கணவரையும் அழைத்து போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

அப்போது, நிஷா கொடுத்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. இதையடுத்து அவரிடம் தனியாக விசாரணை நடத்தியபோது, நிஷா தன் மகளை வீட்டுக்கு வெளியிலிருக்கும் தண்ணீர் தொட்டியில் தூக்கிப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து அந்தப் பெண்ணை விசாரித்த போலீஸார் கூறுகையில், “சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 2011-ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. 2013-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தப் பெண் மீண்டும் கர்ப்பமானபோது, பில்லி, சூனியத்தின் மூலம் வயிற்றிலிருப்பது பெண் குழந்தை என்று எண்ணி, கருவைக் கணவன் வீட்டார் கலைக்கச் செய்திருக்கின்றனர். இது போன்று மூன்று முறை நிஷாவைக் கட்டாய கருக்கலைப்பு செய்யும்படி கணவன் வீட்டார் சித்ரவதை செய்திருக்கிறார்கள். அதோடு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற கோபத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நிஷாவைச் சித்ரவதை செய்திருக்கிறார்கள்.

பில்லி, சூனியம்

இறுதியாக நிஷா மீண்டும் கர்ப்பம் அடைந்தபோது கர்ப்பத்தைத் தொடர கணவன் வீட்டார் அனுமதித்தனர். இதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் குழந்தையே பிறந்தது. இதனால் கணவன் வீட்டார் நிஷாவைக் கைவிட்டனர். நிஷா தனியாக வசித்துவந்தார். இதனால் நிஷாவின் பெற்றோர் அவருடன் வந்து தங்கியிருந்தனர். பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து, தன் மூன்று மாதப் பெண் குழந்தையை வீட்டுக்கு வெளியிலிருந்த தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசி கொலை செய்திருக்கிறார். தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட குழந்தையின் உடலை மீட்டு, அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” என்றனர்.

Also Read: `சொத்துக்காக பெற்றோரை பிள்ளைகள் சித்ரவதை செய்கின்றனர்!’ – மும்பை உயர் நீதிமன்றம்

AIARA

🔊 Listen to this மும்பையின் மத்திய பகுதியிலிருக்கும் காலாசவுக்கியில் வசிப்பவர் நிஷா ஷிண்டே (36). இவருக்கு மூன்று மாதப் பெண் குழந்தை ஒன்று இருந்தது. அந்தக் குழந்தையைச் சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக நிஷா அண்மையில் போலீஸில் புகார் செய்திருந்தார். தான் தனியாக இருந்தபோது வந்த சில பெண்கள் தன்மீது மயக்க மருந்தைத் தெளித்துவிட்டு குழந்தையைக் கடத்திசென்றுவிட்டதாக அவர் போலீஸாரிடம் கூறியிருந்தார். பெண் குழந்தை அதையடுத்து, போலீஸார் உடனே விரைந்து செயல்பட்டு நிஷா வசிக்கும் கட்டடத்தைச் சுற்றியிருக்கும்…