ஒரே மாதத்தில் 5-வது முறையாக ஏவுகணை சோதனை செய்த வட கொரியா!

  • 6

வட கொரியா ஒரே மாதத்தில் ஐந்தாவது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பது உலக அரங்கில் பேசுபொருளாகி இருக்கிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது.

வடகொரியா

சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா பரவல் காரணமாக வட கொரியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஆனால், வடகொரியா பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், வடகொரியா நேற்று ஒரே நாளில் 2 ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படுகிறது. நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து இரண்டு குரூஸ் ரக ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 5 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “எங்கள் நாட்டில் கொரோனா இல்லை” – அடித்துச் சொல்லும் வடகொரியா; சந்தேகம் கிளப்பும் உலக நாடுகள்!

AIARA

🔊 Listen to this வட கொரியா ஒரே மாதத்தில் ஐந்தாவது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பது உலக அரங்கில் பேசுபொருளாகி இருக்கிறது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. வடகொரியா சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா…

Leave a Reply

Your email address will not be published.