ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு ராகுல் கேப்டன்

ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு ராகுல் கேப்டன்

புதுடெல்லி: தென் ஆப்ரிக்க அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் ஷர்மா காயம் காரணமாக ஓய்வெடுத்து வருவதால், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தலைமை பொறுப்பேற்கிறார்.மொத்தம் 18 வீரர்கள் அடங்கிய அணியில் தொடக்க வீரர் தவான், ஸ்பின்னர் ஆர்.அஷ்வின் இடம் பிடித்துள்ளனர்.இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யஜ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிரிஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.

AIARA

🔊 Listen to this புதுடெல்லி: தென் ஆப்ரிக்க அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் ஷர்மா காயம் காரணமாக ஓய்வெடுத்து வருவதால், அவருக்கு பதிலாக…

Leave a Reply

Your email address will not be published.