ஒமைக்ரான் எதிரொலி: உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் அமலுக்கு வருகிறது ஊரடங்கு

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பரவலை தடுக்க, நாளையிலிருந்து இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அங்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

ஒமைக்ரான் பரவலை தடுக்க தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்க  நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நேற்று இரவு முதல் பகுதிநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது உ.பி.யிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

image

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளதால், அங்கு ஒமைக்ரான் தடுப்புக்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி: ஒமைக்ரான் பரவல்: மத்திய பிரதேசத்தில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

🔊 Listen to this உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பரவலை தடுக்க, நாளையிலிருந்து இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அங்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவலை தடுக்க தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்க  நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நேற்று இரவு முதல் பகுதிநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது உ.பி.யிலும் இரவு…