ஐ.என்.எஸ். ரன்விர் போர்க்கப்பலின் உள் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்து! – கடற்படை வீரர்கள் 3 பேர் பலி

  • 5

மும்பை டாக்யார்டு ரோடு கடற்படைத்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஐ.என்.எஸ்.ரன்விர் போர்க்கப்பலில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. கப்பலின் உள் அறையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கடற்படைக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடற்படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கப்பலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று கடற்படை வீரர்கள் தெரிவித்தனர்.

ஐ.என்.எஸ். ரன்விர்

இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில், “மும்பை டாக்யார்டு ரோடு கடற்படை தளத்தில் ஏற்பட்ட சம்பவம் துரதிஷ்டவசமானது. கப்பலின் உள் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயம் அடைந்த 3 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துள்ளனர். ஐ.என்.எஸ்.ரன்விர் கப்பல் கிழக்கு கடற்படை மண்டலத்தில் பணியில் நிறுத்தப்பட்டு இருந்தது.

கப்பலில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதிர்ஷ்டவசமாக கப்பலில் பெரிய அளவில் வெடிவிபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி மும்பை அருகே நடுக்கடலில் ஒ.என்.சி.ஜி. ஆயில் கிணறு அருகே ரோஹினி என்ற கப்பலில் தீப்பிடித்துக்கொண்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

AIARA

🔊 Listen to this மும்பை டாக்யார்டு ரோடு கடற்படைத்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஐ.என்.எஸ்.ரன்விர் போர்க்கப்பலில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. கப்பலின் உள் அறையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கடற்படைக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். கடற்படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கப்பலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று கடற்படை வீரர்கள்…

Leave a Reply

Your email address will not be published.