“ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போதைக்கு இல்லை!” – சரத் பவாரைச் சந்தித்த பிறகு மம்தா பானர்ஜி தகவல்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தற்போது பலவீனமாக இருக்கும் பகுதியில் தனது கட்சியை விரிவுபடுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார். ஏற்கெனவே, கோவாவில் சில காங்கிரஸ் தலைவர்களை மம்தா பானர்ஜி தனது கட்சிக்கு இழுத்திருக்கிறார். தற்போது மம்தா பானர்ஜி, மும்பைக்கு மூன்று நாள்கள் பயணமாகச் சென்றிருக்கிறார். மும்பையில் முகாமிட்டிருக்கும் மம்தா, அதிருப்தியிலிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் யாராவது சிக்குவார்களா என்று ஆராய்ந்துவருவதோடு, சிவசேனா தலைவர்கள் சஞ்சய் ராவத், ஆதித்யா தாக்கரே ஆகியோரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால், அவரை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசவில்லை. ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தற்போது நாட்டில் இனவாத சூழ்நிலை இருக்கிறது. இதற்கு எதிரான வலுவான மாற்று தேவை. அதைத் தனியாக யாராலும் செய்ய முடியாது” என்றார்.

செய்தியாளர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத் பவார் தலைமை தாங்குவாரா என்று கேட்டதற்கு, “என்ன ஐக்கிய முற்போக்கு கூட்டணி? ஐக்கிய முற்போக்கு கூட்டணியே இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இது குறித்து முடிவு செய்வோம்” என்றார்.

இந்தச் சந்திப்பு குறித்து சரத் பவார் கூறுகையில், “வலுவான மாற்றுத் தலைமை தேவை. மம்தா பானர்ஜி போன்றவர்கள் தேசிய அளவில் ஒன்று சேர வேண்டும். எங்கள் திட்டம் இன்றைக்கானது கிடையாது. தேர்தலுக்கானது” என்று தெரிவித்தார். முன்னதாக மும்பையில் மம்தா பானர்ஜி முன்னாள் நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசுகையில், “பிராந்திய கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் பா.ஜ.க-வை எளிதில் தோற்கடிக்க முடியும். பா.ஜ.க ஒரு கொடூரமான ஜனநாயகமற்ற கட்சி. இந்தியா, மனித வளத்தை விரும்புகிறது. அடியாள் பலத்தை விரும்பவில்லை. பா.ஜ.க-வால் நடிகர் ஷாருக் கான்கூட பாதிக்கப்பட்டிருக்கிறார். நாம் வெற்றிபெற்றால் எங்கிருந்தும் போராட முடியும், பேச முடியும். எங்களுக்கு வழிகாட்டுங்கள், ஆலோசனை வழங்குங்கள். மகாராஷ்டிராவுக்கும் மேற்கு வங்கத்துக்கும் மிக நெருங்கிய பந்தம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

சரத் பவார்

மம்தா பானர்ஜி, தன்னுடன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரையும் அழைத்து வந்திருந்தார். பிரசாந்த் கிஷோர் வழிகாட்டுதலின் பேரில்தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மம்தா சென்று தனது கட்சியை வளர்த்துவருகிறார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் இதுவரை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசவில்லை. எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வுக்கு எதிராக ஓரணியில் நின்று போராட வேண்டும் என்று மம்தா பானர்ஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதோடு மேகாலயாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 12 பேரைத் தனது கட்சிக்குப் பிரித்துக்கொண்டு வந்துவிட்டார்.

அஸ்ஸாமில் அகில இந்திய மகளிரணி முன்னாள் தலைவர் சுஷ்மிதா தேவியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். அவருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை மம்தா பானர்ஜி கொடுத்திருக்கிறார். இது தவிர ஹரியானா, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தாவும் தலைவர்கள்… வலுப்பெறும் திரிணாமுல்… தேசிய அரசியலில் விஸ்வரூபம் எடுப்பாரா மம்தா?

AIARA

🔊 Listen to this திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தற்போது பலவீனமாக இருக்கும் பகுதியில் தனது கட்சியை விரிவுபடுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார். ஏற்கெனவே, கோவாவில் சில காங்கிரஸ் தலைவர்களை மம்தா பானர்ஜி தனது கட்சிக்கு இழுத்திருக்கிறார். தற்போது மம்தா பானர்ஜி, மும்பைக்கு மூன்று நாள்கள் பயணமாகச் சென்றிருக்கிறார். மும்பையில் முகாமிட்டிருக்கும் மம்தா, அதிருப்தியிலிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் யாராவது சிக்குவார்களா என்று ஆராய்ந்துவருவதோடு, சிவசேனா தலைவர்கள் சஞ்சய் ராவத், ஆதித்யா தாக்கரே ஆகியோரையும் சந்தித்துப்…

AIARA

🔊 Listen to this திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தற்போது பலவீனமாக இருக்கும் பகுதியில் தனது கட்சியை விரிவுபடுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார். ஏற்கெனவே, கோவாவில் சில காங்கிரஸ் தலைவர்களை மம்தா பானர்ஜி தனது கட்சிக்கு இழுத்திருக்கிறார். தற்போது மம்தா பானர்ஜி, மும்பைக்கு மூன்று நாள்கள் பயணமாகச் சென்றிருக்கிறார். மும்பையில் முகாமிட்டிருக்கும் மம்தா, அதிருப்தியிலிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் யாராவது சிக்குவார்களா என்று ஆராய்ந்துவருவதோடு, சிவசேனா தலைவர்கள் சஞ்சய் ராவத், ஆதித்யா தாக்கரே ஆகியோரையும் சந்தித்துப்…