`எப்படி எங்களை முறைக்கலாம்?!’ – கொலையில் முடிந்த கோவை பள்ளி மாணவர்கள் மோதல்

  • 5

கோவை ஆலந்துறை அருகே பூலுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. அங்கு 11-ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பிரிவினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. கடந்த வாரம் 16 வயது மாணவர்கள் இருவரை, எதிர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் முறைத்துப் பார்த்ததாக கூறப்படுகிறது.

கோவை

Also Read: வலிமை வைரல் போஸ்டர்: “மனசு ரொம்ப வலிக்குது IT’s Ok” – பின்னணி சொல்லும் கோவை ரசிகர்கள்!

இதுகுறித்து 16 வயது மாணவர்கள் தரப்பில் அவர்களிடம் கேட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த விஷயத்தை அந்த எதிர் தரப்பு மாணவர்கள்,17 வயதான அதே பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவனிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களிடம் மீண்டும் பிரச்னை செய்துள்ளனர். அப்போது இரண்டு பிரிவினரையும் ஆசிரியர்கள் எச்சரித்து அனுப்பியுள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது முன்னாள் மாணவனின் தலைமையில் சென்று மீண்டும் பிரச்னை செய்துள்ளனர்.

கத்தி குத்து

கெட்ட வார்த்தையில் திட்டி, ‘செத்துப்போடா’ என்று சொல்லியபடி கத்தியால் குத்தியுள்ளனர். இதை தடுக்க வந்தவர்களையும், ‘கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளனர்.

இதில் மூன்று மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. முக்கியமாக 16 வயது மாணவனுக்கு தலைமையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரித்து வந்தனர். கத்தியால் குத்திய மாணவர்களை பிடித்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

மரணம்

இந்நிலையில், பலத்த காயமடைந்த மாணவன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, போலீஸார் இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

AIARA

🔊 Listen to this கோவை ஆலந்துறை அருகே பூலுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. அங்கு 11-ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பிரிவினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. கடந்த வாரம் 16 வயது மாணவர்கள் இருவரை, எதிர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் முறைத்துப் பார்த்ததாக கூறப்படுகிறது. கோவை Also Read: வலிமை வைரல் போஸ்டர்: “மனசு ரொம்ப வலிக்குது IT’s Ok” – பின்னணி சொல்லும் கோவை ரசிகர்கள்! இதுகுறித்து 16 வயது…

Leave a Reply

Your email address will not be published.