உ.பி: `மன்மோகன் சிங் முதல் சோனியா காந்தி வரை’ – தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள்!

  • 6

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தலில் 403 இடங்களில், வெறும் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்தமுறை பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், பிரியங்கா காந்தி தலைமையில், இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்களை நம்பி அந்தக் கட்சி தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்து விட்டால் கிட்டத்தட்ட மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விடலாம் என்ற எழுதப்படாத விதி இருப்பதால், அங்கு ஆட்சியைப் பிடிப்பதில், அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

நாட்டிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில், தற்போதே தேர்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கிவிட்டது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆளும் பா.ஜ.க கடுமையாக பணியாற்றி வருகிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. இதில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு செல்லும் இடமெல்லாம் ஆதரவு பெருகி வருகிறது. வரும் தேர்தலில் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவி ஏற்பார் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சோனியா, மன்மோகன் சிங்,

இந்த நிலையில், உத்தரப்பிரதேச தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் முக்கியத் தலைவர்களின் பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி என 30 அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Also Read: உத்தர் அரசியல்: காங்கிரஸ் ஆட்சியில் உள்குத்து, வெளிக்குத்து அட்ராசிட்டிஸ் | மினி தொடர்|பாகம் – 2

AIARA

🔊 Listen to this உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தலில் 403 இடங்களில், வெறும் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்தமுறை பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், பிரியங்கா காந்தி தலைமையில்,…

Leave a Reply

Your email address will not be published.