உ.பி: `மனஅழுத்தம்; ஒமிக்ரானில் இருந்து விடுவிக்கிறேன்!’ -மனைவி, குழந்தைகளை கொலை செய்த பேராசிரியர்

உலகம் முழுவதும் கொரோனா அச்சம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் புதிதாக ஒமிக்ரான் கொரோனா வேரியன்ட் வந்து மக்களை மீண்டும் அச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஒமிக்ரான் கொரோனாவுக்கு பயந்து பேராசிரியர் ஒருவர் தனது மனைவி, இரண்டு பிள்ளைகளை கொலை செய்துள்ளார்.

கான்பூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் தடயவியல் பேராசிரியராக இருப்பவர் சுஷில் சிங்(55). இவருக்கு மனைவி சந்திரபிரபா, 21 வயதில் மகனும், 16 வயதில் மகளும் இருந்தனர். சுஷில் சிங் சமீப காலமாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். அதற்காக சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். அதோடு சமீபத்தில் பரவி வரும் ஒமிக்ரான் கொரோனா குறித்து சுஷில் சிங்கிடம் அதிகப்படியான அச்சம் இருந்தது. இதனால் ஒமிக்ரானில் இருந்து விடுவிப்பதாக கூறிக்கொண்டு தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தனது மகன், மகளை தலையில் அடித்து கொலை செய்து விட்டு தனது சகோதரன் சுனிலுக்கு வாட்ஸ் ஆப்பில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்துவிட்டதாக மெசேஜ் அனுப்பிவிட்டு தப்பி ஓடிவிட்டார். சுனிலுக்கு அனுப்பப்பட்ட மெசேஜில், “கொரோனா உயிரிழப்புக்களால் மிகவும் மனம் வெறுத்துவிட்டேன். ஒமிக்ரான் கொரோனா யாரையும் விட்டு வைக்காது. எனவே அது போன்ற சூழ்நிலையில் இருந்து ஒவ்வொருவரையும் விடுவிக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

பேராசிரியர் சுஷில் மற்றும் மனைவி சந்திரபிரபா

சுனில் உடனே தனது சகோதரன் வீட்டிற்கு விரைந்து சென்று கதவை திறந்து பார்த்த போது சுஷில் மனைவி, பிள்ளைகள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். உடனே சுனில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு போலீஸார் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். சுஷில் கொலை குறித்து தனது டைரியில், மனஅழுத்தம் காரணமாக கொலை செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து கான்பூர் போலீஸ் கமிஷனர் அருண் கூறுகையில், “10 பக்கத்திற்கு கொலையாளி கடிதம் எழுதி வைத்திருக்கிறார். மனஅழுத்தத்தில் இக்காரியத்தை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகிறோம். தப்பியோடிய சுஷிலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் சுஷில் தனது மனைவியை கொலை செய்ய முயன்று இருப்பதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்” என்றார்.

🔊 Listen to this உலகம் முழுவதும் கொரோனா அச்சம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் புதிதாக ஒமிக்ரான் கொரோனா வேரியன்ட் வந்து மக்களை மீண்டும் அச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஒமிக்ரான் கொரோனாவுக்கு பயந்து பேராசிரியர் ஒருவர் தனது மனைவி, இரண்டு பிள்ளைகளை கொலை செய்துள்ளார். கான்பூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் தடயவியல் பேராசிரியராக இருப்பவர் சுஷில் சிங்(55). இவருக்கு மனைவி சந்திரபிரபா, 21 வயதில் மகனும், 16 வயதில் மகளும் இருந்தனர். சுஷில்…