உலக சாம்பியனை வீழ்த்தி அசத்தல் இந்தியா ஓபனில் லக்‌ஷியா சாம்பியன்

உலக சாம்பியனை வீழ்த்தி அசத்தல் இந்தியா ஓபனில் லக்‌ஷியா சாம்பியன்

  • 9

புது டெல்லி : இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் லக்‌ஷியா சென் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் லோ கீன் யீவுடன் (சிங்கப்பூர்) நேற்று மோதிய லக்‌ஷியா (20 வயது) அதிரடியாக விளையாடி 24-22, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 54 நிமிடங்களுக்கு நீடித்தது. சூப்பர் 500 அந்தஸ்து பேட்மின்டன் தொடரில் லக்‌ஷியா முதல் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் லக்‌ஷியா வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.சாத்விக் – சிராஜ் அபாரம்இந்தியா ஓபன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி 3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவின் முகமது ஆசன் – ஹெண்ட்ரா செடியவான் ஜோடியை எதிர்கொண்டது. கடும் போராட்டமாக அமைந்த இப்போட்டியில் இந்திய இணை 21-16, 26-24 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. இப்போட்டி 43 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

AIARA

🔊 Listen to this புது டெல்லி : இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் லக்‌ஷியா சென் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் லோ கீன் யீவுடன் (சிங்கப்பூர்) நேற்று மோதிய லக்‌ஷியா (20 வயது) அதிரடியாக விளையாடி 24-22, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 54 நிமிடங்களுக்கு நீடித்தது. சூப்பர் 500…

Leave a Reply

Your email address will not be published.