“உத்தரப்பிரதேசத்துக்கு ஒரு நியாயம்… தமிழகத்துக்கு ஒரு நியாயமா?!” – சு.வெங்கடேசன் `சுளீர்’ அறிக்கை

`மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்’ என்று தான் முன்வைத்த கோரிக்கையை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா முடியாது என்று மறுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக ஊடகத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அப்படி நான் கூறவில்லை என்று அமைச்சர் சிந்தியா டிவிட்டரில் விளக்கம் அளித்திருப்பது, மீண்டும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

மதுரை விமான நிலையம்

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் எம்.பி சு.வெங்கடேசன், “மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை நானும், மாணிக்கம் தாகூரும் சந்தித்தபோது, அவர் பேசிய கருத்துகளை நாங்கள் வெளியிட்டது விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

இது குறித்து அமைச்சர் சிந்தியா மீண்டும் டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் மிக்க மகிழ்ச்சி. என்னிடமும், மாணிக்க தாகூரிடமும் அவர் கூறியதையே ஊடகங்களுக்கு வெளியிட்டோம். தற்போது, நான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை, மிகுந்த அதிர்ச்சியாய் இருக்கிறது என்கிறார்.

மதுரை விமான நிலையம்

வளர்ச்சி சார்ந்த மனிதவளக் குறியீடுகளில் முன்னணியில் இல்லாத மாநிலத்துக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை கொடுக்கும் நீங்கள், வளர்ச்சி சார்ந்த குறியீடுகளில் முதன்மையாகவும் , ஜிஎஸ்டி பங்களிப்பில் நாட்டிலேயே இரண்டாவதாக இருக்கும் தமிழகத்துக்கு ஏன் நியாயம் வழங்க மறுக்குறீர்கள்? அரசு இன்னும் எத்தனை விமான நிலையங்களையும் திறக்கத் தயாராக இருக்கிறது என்றும் கூறும் அமைச்சரே அதே வேகத்தோடு மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவியுங்கள். வரவேற்க தயாராக இருக்கிறோம். அதுவரை எங்கள் கோரிக்கைகள் தொடரும்.

நாங்கள் உண்மைக்கு மாறாக பேசவேண்டிய தேவையில்லை. தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

AIARA

🔊 Listen to this `மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்’ என்று தான் முன்வைத்த கோரிக்கையை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா முடியாது என்று மறுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக ஊடகத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அப்படி நான் கூறவில்லை என்று அமைச்சர் சிந்தியா டிவிட்டரில் விளக்கம் அளித்திருப்பது, மீண்டும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. மதுரை விமான நிலையம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் எம்.பி சு.வெங்கடேசன்,…