“உதயநிதியை அமைச்சராக்க நினைப்பது ஃபாஸ்ட் ஃபுட் அரசியல்!’’ – சொல்கிறார் செல்லூர் ராஜூ

“மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். எங்களை அடிக்கடி போராடத் தூண்டாதீர்கள்” என்று மதுரையில் நடந்த ஆர்பாட்டத்தில் திமுகவை கிண்டலடித்து பேசி கட்சியினரை கலகலப்பாக்கினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அதிமுக ஆர்பாட்டம்

திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நேற்று ஆர்பாட்டம் நடத்தினர். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.

Also Read: அண்ணாமலை மீது கை வைத்துப் பாருங்கள்- சி.வி.சண்முகம்|ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படை|Quicklook

ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜூ பேசும்போது, “அதிமுகவை வென்றவரும் இல்லை. கடவுளைக் கண்டவரும் இல்லை. தமிழக மக்களுக்கு 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்த அதிமுக கடந்த தேர்தலில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. உங்களுக்குத்தான் வாக்களித்தோம் என்று மக்கள் எல்லோரும் கூறுகிறார்கள்.

செல்லூர் ராஜூ

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. காவல்துறைக்கும் பாதுகாப்பில்லை. ரெளடிகள் ராஜ்ஜியம் தலை தூக்கிவிட்டது. பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, கியாஸ் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து என கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Also Read: `வேலுமணி – ஜெயக்குமார்’ – சேம்சைடு கோல்… அலறும் எடப்பாடி! |Elangovan Explains

மதுரையில் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மதுரையை சேர்ந்த அமைச்சர்கள் இருவரும் அரசிடம் நிதியை பெற்று உடனே சாலைகளை அமைக்க வேண்டும்.

உதயநிதியை அமைச்சராக்க மக்கள் விரும்புகிறார்கள் என்று திமுக அமைச்சர்கள் அவர்களே கூறி வருகிறார்கள். கலைஞர், மு.க.ஸ்டாலினை நிதானமாக பக்குவமாக அரசியலில் வளர்த்தார். ஆனால், உதயநிதியை அமைச்சராக்க விரும்புவது ஃபாஸ்ட் ஃபுட் அரசியலாகும்.

மதுரை மாநகர் அதிமுக ஆர்பாட்டம்

கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட 1,000 ரூபாயில் தொடங்கி 2,500 வரை கொடுத்தோம். ஆனால், பொங்கல் பரிசு பற்றி திமுக அரசு ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது.

வருகின்ற பொங்கலுக்கு மக்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று மதுரை மக்களின் சார்பாக வலியுறுத்துகிறேன். மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். எங்களை அடிக்கடி போராடத் தூண்டாதீர்கள். அதிமுக மக்களுக்கான கட்சி. மக்கள் பிரச்னைகளுக்காக எப்போதும் போராடும்” என்று திமுக அரசை கிண்டலாகப் பேசி வந்திருந்த தொண்டர்களை கலகலக்க வைத்தார்.

🔊 Listen to this “மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். எங்களை அடிக்கடி போராடத் தூண்டாதீர்கள்” என்று மதுரையில் நடந்த ஆர்பாட்டத்தில் திமுகவை கிண்டலடித்து பேசி கட்சியினரை கலகலப்பாக்கினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதிமுக ஆர்பாட்டம் திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நேற்று ஆர்பாட்டம் நடத்தினர். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. Also Read: அண்ணாமலை மீது கை வைத்துப் பாருங்கள்- சி.வி.சண்முகம்|ராஜேந்திர பாலாஜியை…