உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம்? – தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா!

  • 3

அமெரிக்கா தனது பாதுகாப்பு கூட்டணியான நேட்டோவை விஸ்தரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதில் உக்ரைனையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், தனது அண்டை நாடான உக்ரைன், அமெரிக்காவின் வலிமையான பாதுகாப்பு கூட்டணியின் ஒரு பகுதியாவதை ரஷ்யா விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், உக்ரைனை நேட்டோவில் சேர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. என்றாலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் பீரங்கிகள், சண்டை வாகனங்கள் மற்றும் ஏவுகணைகளுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், எந்நேரமும் உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவும் வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படையெடுப்புக்குச் சாத்தியம் இருப்பதால், ஏற்கெனவே உக்ரைனுக்கான அனைத்து பயணங்களுக்கும் எதிராக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், உக்ரைனிலிருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளியேற உள்ளனர். இதற்கிடையே, `உக்ரைனில் தனது ஆதரவாளரைக் கொண்டு பொம்மை அரசு அமைக்க ரஷ்யா முயற்சிக்கிறது’ என இங்கிலாந்து குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இதை ரஷ்யா மறுத்து வருகிறது.

Also Read: அமெரிக்கா: ஓடும் சரக்கு ரயில்களில் கொள்ளை! – அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகள் பாதிப்பு

AIARA

🔊 Listen to this அமெரிக்கா தனது பாதுகாப்பு கூட்டணியான நேட்டோவை விஸ்தரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதில் உக்ரைனையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், தனது அண்டை நாடான உக்ரைன், அமெரிக்காவின் வலிமையான பாதுகாப்பு கூட்டணியின் ஒரு பகுதியாவதை ரஷ்யா விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், உக்ரைனை நேட்டோவில் சேர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. என்றாலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள்…

Leave a Reply

Your email address will not be published.