இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோம்நாத் யார் தெரியுமா?

  • 52

இஸ்ரோ தலைவராக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவனின் பதவிகாலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் (58) ஐ.எஸ்.ஆர்.ஓ புதிய தலைவராகியுள்ளார். எம்.ஜி.கே மேனோன், கே.கஸ்தூரி ரங்கன், மாதவன் நாயர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரிசையில் கேரளத்தைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் இஸ்ரோ தலைவராகியுள்ளார். கேரளத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் ஆகும் ஐந்தாவது நபர் சோம்நாத். தற்போது திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டரில் இயக்குநராக இருக்கும் எஸ்.சோம்நாத் ஆலப்புழா மாவட்டம் துறவூர், அரூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியராக பணிபுரிந்த ஸ்ரீதர பணிக்கர், தாய் தங்கம்மாள். கொல்லம் டி.கே.எம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் சோம்நாத். பின்னர் பெங்களூர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ்-ல் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் கோல்ட் மெடலுடன் படிப்பை பூர்த்தி செய்தார்.

இஸ்ரோ தலைவர் சோம்நத்

1985-ல் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாஸ் ஸ்பேஸ் செண்டரில் பணியில் சேர்ந்தார். அங்கு லிக்யூட் பிரப்பல்ஷன் சிஸ்டம் செண்டரின் (எல்.பி.எஸ்.சி) தலைவராக இருந்தார். ராக்கெட் தொழில்நுட்பம், வடிவமைப்பு, ராக்கெட் எரிபொருள் மேம்பாடு ஆகியவற்றில் விஞ்ஞானி சோம்நாத் நிபுணத்துவம் பெற்றவர். பி.எஸ்.எல்.வி திட்டம் ஆரம்பகட்டத்தில் இருந்த சமயத்தில் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார் சோம்நாத். புதிய தலைமுறை ராக்கெட்டான எல்.எம்.வி-3 2014-ல் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டபோது சோம்நாத் அதில் திட்ட இயக்குநராக இருந்தார்.

2015-ல் எல்.பி.எஸ்.சி இயக்குநராக பொறுப்பேற்றார். ஜி.எஸ்.எல்.வி மார்க் -3 அசோசியேட் புராஜெக் டைரக்டராக பணியாற்றிய சோம்நாத், அதே சமயத்தில் இந்தியன் கிரயோஜனிக் கட்டங்களை செயல்படுத்தும் குழுவுக்கு வழிகாட்டும் பணியையும் செய்தார். 2018-ல் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டர் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சோம்நாத்தின் மனைவி வல்சலா திருவனந்தபுரம் ஜி.எஸ்.டி துறையில் பணிபுரிந்துவருகிறார். மகள் மாலிகா, மகன் மாதவ் ஆகியோர் இன்ஜினியரிங் படித்து வருகின்றனர். இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோம்நாத்துக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”விண்வெளித்துறைக்குஇன்று புதிய திசை தேவைப்படுகிறது. உலகில் உள்ள ஸ்பேஸ் ஏஜென்சிகள், ஸ்பேஸ் டிசைனஸ் புதிய பகுதிக்கு கடந்துள்ளன. நாசா, ஈசா, ஐரோப்பிய ஏஜென்சிகள் ராக்கெட் தயாரிப்பிலும், விண்வெளிக்கு மனிதனை அழைத்துச் செல்லும் தகுதி படைத்துள்ளன. அந்த மாற்றம் இந்தியாவிலும் ஏற்படவேண்டும் என்பது நம் முக்கிய நோக்கம். எனவே இந்த துறையில் புதியவர்கள் வரவேண்டிய அவசியம் உண்டு. அது பிரைவேட் ஸ்டார்ட் அப்-களாக இருக்கலாம், அல்லது பெரிய இண்டஸ்ட்ரி ஆக இருக்கலாம்.

ராக்கெட் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பை தொழில் வாய்ப்பாக வளர்த்து கொண்டுவரவேண்டும் என்பதுதான் பெரிய லட்சியம். உதாரணமாக 15,000 கோடி ரூபாயின் திட்டம் இந்தியன் ஸ்பேஸ் புராகிராமிற்கு உள்ளது. இது போதாது. அது 20,000 கோடி, 50,000 கோடி என இது அதிகரிக்க வேண்டும். இது அரசு நிதியை மட்டும் வைத்து செய்ய முடியாது. டெலிகாம் துறை போன்றவற்றில் வந்தது போன்ற மாற்றங்கள் இதிலும் வர வேண்டும். அதன்மூலம் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும்” என்றார்.

AIARA

🔊 Listen to this இஸ்ரோ தலைவராக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவனின் பதவிகாலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் (58) ஐ.எஸ்.ஆர்.ஓ புதிய தலைவராகியுள்ளார். எம்.ஜி.கே மேனோன், கே.கஸ்தூரி ரங்கன், மாதவன் நாயர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரிசையில் கேரளத்தைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் இஸ்ரோ தலைவராகியுள்ளார். கேரளத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் ஆகும் ஐந்தாவது நபர் சோம்நாத். தற்போது திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டரில் இயக்குநராக இருக்கும் எஸ்.சோம்நாத் ஆலப்புழா மாவட்டம் துறவூர்,…

AIARA

🔊 Listen to this இஸ்ரோ தலைவராக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவனின் பதவிகாலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் (58) ஐ.எஸ்.ஆர்.ஓ புதிய தலைவராகியுள்ளார். எம்.ஜி.கே மேனோன், கே.கஸ்தூரி ரங்கன், மாதவன் நாயர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரிசையில் கேரளத்தைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் இஸ்ரோ தலைவராகியுள்ளார். கேரளத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் ஆகும் ஐந்தாவது நபர் சோம்நாத். தற்போது திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டரில் இயக்குநராக இருக்கும் எஸ்.சோம்நாத் ஆலப்புழா மாவட்டம் துறவூர்,…

Leave a Reply

Your email address will not be published.