இன்ஸ்டா காதல், மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு; கவனம் பெறும் டெக் தம்பதிகள்!
கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்ட தினேஷ் சென்னை ஐஐடியில் திட்ட உதவியாளராக பணியாற்றுகிறார். மணப்பெண் ஜெகநந்தினி சாப்ட்வேர் உருவாக்கத்தில் பணிபுரிபவர். இருவரும் முதன்முதலாக சந்தித்தது இன்ஸ்டாவில். பிப்ரவரி 6 -ம் தேதி நடைபெற இருக்கும் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு மெட்டாவெர்ஸில் நடைபெற உள்ளது.
விருந்தினர்கள் தங்களின் வீடுகளில் இருந்து இவர்களின் நிகழ்வில் இணைய முடியும். நிகழ்வுக்கான தீம் ஹாரிபாட்டர் கோட்டையின் வடிவமைப்பில் இருக்கும். பாரம்பரிய உடை, நவீன ஆடைகள் என விதவிதமாக அவதார் தேர்விற்கு இருக்கும். தங்களுக்கு விருப்பமான உடையில் உள்ள அவதார் மூலமாக விருந்தினர்கள் பங்கேற்கலாம். நிகழ்வுக்கான அன்பளிப்பை கூகுள்பே போன்ற செயலிகள் மூலம் அனுப்பிவைக்கலாம். மறைந்த ஜெக நந்தினியின் தந்தை முன்னிலை வகிக்க இந்த நிகழ்வு நடைபெறும்.
மெட்டாவெர்ஸ் திருமணம்
பிப்ரவரி 6-ம் தேதி காலை திருமணம் சிவலிங்கபுர கிராமத்தில் நடைபெற இருக்கிறது மாலை திருமண வரவேற்பு நிகழ்வு மெட்டாவெர்ஸில் நடைபெறும்.
பிளாக் செயின் (blockchain) விரிட்சுவல் ரியாலிட்டி (Virtual Reality ) ஆகுமெண்டட் ரியாலிட்டி (Augumented Reality) போன்ற தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கான ஏற்பாட்டை க்வாக்டிக்ஸ் டெக் நிறுவனம் மேற்கொள்கிறார்கள். இதற்கு முன்பு கடந்த வருடத்தில் அமெரிக்காவில் இதே போல ட்ராஸி மற்றும் டேவ் இவர்களின் திருமணம் ஒரேசமயத்தில் நேரிலும் மெட்டாவெர்ஸிலும் நடைபெற்றது. ஊரடங்கு காலத்திற்குg; பிறகு திருமண நடைமுறை பெருமளவிற்கு மாறி இருக்கும் நிலையில் மெட்டாவெர்ஸ் இதனை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லவிருக்கிறது.

🔊 Listen to this கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்ட தினேஷ் சென்னை ஐஐடியில் திட்ட உதவியாளராக பணியாற்றுகிறார். மணப்பெண் ஜெகநந்தினி சாப்ட்வேர் உருவாக்கத்தில் பணிபுரிபவர். இருவரும் முதன்முதலாக சந்தித்தது இன்ஸ்டாவில். பிப்ரவரி 6 -ம் தேதி நடைபெற இருக்கும் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு மெட்டாவெர்ஸில் நடைபெற உள்ளது. விருந்தினர்கள் தங்களின் வீடுகளில் இருந்து இவர்களின் நிகழ்வில் இணைய முடியும். நிகழ்வுக்கான தீம் ஹாரிபாட்டர் கோட்டையின் வடிவமைப்பில் இருக்கும். பாரம்பரிய உடை,…