இந்தியில் வாக்காளர் அடையாள அட்டை… சர்ச்சை குறித்து கோவை ஆட்சியர், ஆணையாளர் விளக்கம்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஒரு வார்டில் ‘புதுப்பிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில்’ சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் வாக்காளரொருவரின் பெயரும், அவர் தந்தை பெயரும் இந்தியில் வெளியாகியுள்ளது. இப்படி பெயர்கள் வேற்று மொழியில் வெளியாகியுள்ளது சர்ச்சைக்கு உள்ளாகிவருகின்றது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் மாறி வெளிவந்துக்கொண்டிருந்த குழப்பங்கள் எழுந்துவரும் நிலையில், பெயர்கள் வேறு மொழியில் வந்ததால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான வாக்காளர் பட்டியல், கடந்த டிசம்பர் 1 நாள் அன்று வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 1290 வாக்குச் சாவடிகளும் 287 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஆண் வாக்காளர்கள் 7,69,397, பெண் வாக்காளர்கள் 7,68,736 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 278 பேர் என மொத்தம் 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர். இதன்கீழ் வரும் மனோஜ் குமார் என்ற வாக்காளருக்குத்தான், அவருடைய பெயர் இந்தியில் அச்சிடப்பட்டட்டு வந்துள்ளது. மாநில மொழியில் இல்லாமல் வேறு மொழியில் அது அச்சிடப்பட்டு இருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
image
இந்த சர்ச்சை குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபா சுங்கரா தெரிவிக்கையில், “கொடுக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு பூத் வாரியாக பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகும். இந்த தவறுகள் குறித்து சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இந்த சர்ச்சை குறித்து தெரிவிக்கையில், “கணினி தொடர்பான பதிவேற்றத்தில் தவறு இருக்கலாம். இந்த தவறு விரைவில் சரி செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

AIARA

🔊 Listen to this கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஒரு வார்டில் ‘புதுப்பிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில்’ சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் வாக்காளரொருவரின் பெயரும், அவர் தந்தை பெயரும் இந்தியில் வெளியாகியுள்ளது. இப்படி பெயர்கள் வேற்று மொழியில் வெளியாகியுள்ளது சர்ச்சைக்கு உள்ளாகிவருகின்றது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் மாறி வெளிவந்துக்கொண்டிருந்த குழப்பங்கள் எழுந்துவரும் நிலையில், பெயர்கள் வேறு மொழியில் வந்ததால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர். கோவை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான வாக்காளர் பட்டியல், கடந்த டிசம்பர் 1 நாள் அன்று வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 1290…