இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நாளை தொடக்கம்: தொடரை வெல்லப்போவது யார்?

இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நாளை தொடக்கம்: தொடரை வெல்லப்போவது யார்?

  • 2

கேப்டவுன்: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட் கொண்ட தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2வது போட்டியில் தென்ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என சமனில் உள்ள நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை தொடங்குகிறது. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கி நடக்கிறது. முதுகுவலியால் 2வது டெஸ்ட்டில் விளையாடாத கோஹ்லி நாளை களம் இறங்குகிறார். இதனால் விகாரிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். புஜாரா, ரகானே, ரிஷப் பன்ட் தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்வர். பந்துவீச்சில் சிராஜ் காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக உமேஷ்யாதவ் ஆடும் லெவனில் இடம்பிடிக்கிறார். மற்றபடி அணியில் பெரிய மாற்றம் இருக்காது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தென்ஆப்ரிக்க மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.மறுபுறம் தென்ஆப்ரிக்கா, 2வது டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. பேட்டிங்கில் டீன் எல்கர், பவுமா, பீட்டர்சன் வலு சேர்க்கின்றனர். பந்துவீச்சில் ரபாடா(13), லுங்கி நிகிடி(11), மார்கோ ஜான்சன்(12) வேகத்தில் மிரட்டுகின்றனர். அணியில் எந்தவித மாற்றமும் இன்றி தென்ஆப்ரிக்கா ஆடுகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களம் இறங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கேப்டவுன் மைதானம் எப்படி?* வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான கேப்டவுன் மைதானத்தில் இதுவரை எந்த ஒரு ஆசிய அணியும் டெஸ்ட்டில் வெற்றி பெற்றது கிடையாது. இந்தியா இங்கு 5 டெஸ்ட்டில் ஆடி 3ல் தோல்வி, 2ல் டிரா கண்டுள்ளது. கடைசியாக 2018ம் ஆண்டு நடந்த டெஸ்ட்டில் 208 ரன்னை சேசிங் செய்த இந்தியா 135 ரன்னில் சுருண்டு 72 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. * தென்ஆப்ரிக்கா இங்கு 58 டெஸ்ட்டில் ஆடி 2ல் வெற்றி, 21ல் தோல்வி 11ல் டிரா கண்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கு பின் இங்கு ஆடி உள்ள 7 டெஸ்ட்டில் ஒன்றில் மட்டுமே (இங்கிலாந்துக்கு எதிராக) தோல்வி கண்டுள்ளது.* ஒட்டு மொத்தமாக இரு அணிகளும் 41 டெஸ்ட்டில் ஆடி உள்ளதில் 15ல் இந்தியா, 16ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளது. 10 போட்டி டிராவில் முடிந்துள்ளது.வெற்றிபெறுவோம்: டீன் எல்கர்தென்ஆப்ரிக்க கேப்டன் டீன் எல்கர் அளித்துள்ள பேட்டியில், 3வது டெஸ்ட் எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன். ஜோகன்னஸ்பர்க்கில் ஆடியதுபோல் செயல்பட்டால் 3வது டெஸ்டில் வெற்றி பெறுவோம். கேப்டவுன் மைதானம் எங்களின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இறுதி டெஸ்டில் இன்னும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் விளையாட விரும்புகிறேன், என்றார்.

🔊 Listen to this கேப்டவுன்: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட் கொண்ட தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2வது போட்டியில் தென்ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என சமனில் உள்ள நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை தொடங்குகிறது. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கி நடக்கிறது. முதுகுவலியால் 2வது டெஸ்ட்டில் விளையாடாத கோஹ்லி நாளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *