ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் பார்டி, எலினா வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் பார்டி, எலினா வெற்றி

  • 3

மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று 2வது சுற்று போட்டிகள் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி  இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியுடன் மோதினார். இதில்  6-1,6-1 என நேர் செட்டில் பார்டி வெற்றிபெற்றார். 8ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசா 6-0,6-3  என இத்தாலியின் மார்டினா ட்ரெவிசனை சாய்த்தார். 15ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, 6-3,5-7,5-1 என பிரான்சின் ஹார்மனிடானை வென்றார். பெலாரசின் விக்டோரியா அசரென்கா, 6-1,6-2 என சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேனையும், இத்தாலியின் கமிலா ஜியோர்ஜி, 6-2,7-6 என செக்குடியரசின் தெரேசா மார்ட்டின்கோவாவையும் வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா ஆகியோரும் 3வதுசுற்றுக்குள் நுழைந்தனர். ஆடவர் ஒன்றையர 2வதுசுற்றில், இத்தாலியின் லோரென்சோ சோனேகோ, 2-6,6-2,6-3,6-1 என்ற  செட்கணக்கில், ஜெர்மனியின் ஆஸ்கார்ஒட்டேவை வீழ்த்தினார்.

AIARA

🔊 Listen to this மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று 2வது சுற்று போட்டிகள் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி  இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியுடன் மோதினார். இதில்  6-1,6-1 என நேர் செட்டில் பார்டி வெற்றிபெற்றார். 8ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசா 6-0,6-3  என இத்தாலியின் மார்டினா ட்ரெவிசனை சாய்த்தார். 15ம் நிலை…

Leave a Reply

Your email address will not be published.