ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் முகுருசா, அனெட்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் முகுருசா, அனெட்

  • 4

மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 2வது நாளான இன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் 3ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா 6-3, 6-4 என்ற செட்கணக்கில், பிரான்சின் கிளாரா புரலை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், 6-4, 7-5 என ரஷ்யாவின் வேரா ஸ்வோனரேவாவை வென்றார். 6ம் நிலை வீராங்கனை எஸ்டோனியாவின் அனெட் கொண்டவீட், 6-2, 6-3 என செக்குடியரசின் கேத்ரீனா சினியகோவாவை சாய்த்தார். போலந்தின் இகா ஸ்விடெக், ஸ்வீடனின் ரெபேக்கா பீட்டர்சன், செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா ஆகியோரும் முதல்சுற்றில் வெற்றி பெற்றனர். 20ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, 2-6, 2-6 என்ற செட் கணக்கில், ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவில் முதல் சுற்றில், 5ம் நிலை வீரர் ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், 6-3, 6-2, 6-2 என இத்தாலியின் ஜியான்லூகாவை வீழ்த்தினார். குரோஷியாவின் மரின் சிலிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

AIARA

🔊 Listen to this மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 2வது நாளான இன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் 3ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா 6-3, 6-4 என்ற செட்கணக்கில், பிரான்சின் கிளாரா புரலை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், 6-4, 7-5 என ரஷ்யாவின் வேரா ஸ்வோனரேவாவை வென்றார். 6ம் நிலை வீராங்கனை எஸ்டோனியாவின்…

Leave a Reply

Your email address will not be published.