ஆஷஸ் 4வது டெஸ்ட்: இங்கிலாந்து மீண்டும் திணறல்

ஆஷஸ் 4வது டெஸ்ட்: இங்கிலாந்து மீண்டும் திணறல்

  • 3

சிட்னி: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், முதல் 3 டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில் 4வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 137, ஸ்டீவன் ஸ்மித் 67 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்திருந்தது.3வது நாளான இன்று ஆஸி. பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து ஆட்டம் கண்டது. ஹசீப் ஹமித் 6, சாக் கிராலி 18, டேவிட் மாலன் 3 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன் எடுத்திருந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த பென்ஸ்டோக்ஸ்-பேர்ஸ்டோ நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். 33 ஓவரில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 70 ரன் எடுத்திருந்தது.

🔊 Listen to this சிட்னி: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், முதல் 3 டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில் 4வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 137, ஸ்டீவன் ஸ்மித் 67…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *