ஆறுமுகமங்கலம் குளத்தில் முதலை நடமாட்டமா? பீதியில் மக்கள்; வனத்துறையினர் பதில் என்ன?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுணடம் தாமிரபரணி ஆற்றுத் தடுப்பணையின் வடகால் வாய்க்கால் பாசனம் மூலம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பெரிய குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்தக் குளத்தின் மூலம் 2,039 ஏக்கர் பரப்பளவுள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. அத்துடன், அப்பகுதி மக்கள், குளிக்கவும் இக்குளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்தக் குளம் நிரம்பியிள்ளது. ஆகாயத் தாமரைச் செடிகளும் குளத்தை ஆக்கிரமித்துள்ளன. வாழையே இப்பகுதியில் பிரதான சாகுபடிப் பயிராக உள்ளது.

ஆறுமுகமங்கலம்

Also Read: இளைஞர்களின் முயற்சியால் சீரமைக்கப்பட்ட குளம்; 50 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் வந்ததால் மகிழ்ச்சி!

ஏரல் அருகே உள்ள திருப்பணிசெட்டிகுளத்தை சேர்ந்த விவசாயிகள், வாழை பயிரிட்டுள்ள தங்கள் வாழைத் தோட்டத்திற்கு வழக்கம் போல் விவசாயப் பணிகளை மேற்கொள்ளச் சென்றனர். அப்போது தோட்டத்திற்குள் வித்தியாசமான கால் தடங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குளத்தில் குளிக்கச் சென்ற சிலர் சுமார் 100 மீட்டர் தூரத்தில் முதலையைப் பார்த்ததாகக் கூறினர். உடனே இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் ஆறுமுகமங்கலம் குளத்துப் பகுதிக்கு வந்தனர். விவசாயிகள் அடையாளம் காட்டிய வித்தியாசமான கால் தடங்களை ஆய்வு செய்தனர். ஆய்வு செய்தனர். பின்னர், அந்த தோட்டத்தின் வழியாகச் செல்லும் வாய்க்கால் எங்கு சென்றடைகிறது என்பதை ஆய்வு செய்தபோது, அது ஆறுமுகமங்கலம் பெரிய குளத்தில் உள்ள குளத்திற்குப் போய்ச் சேர்வதை அறிந்தனர். அதேபோல, குளத்துப் பகுதியில் விவசாயிகள் முதலையைப் பார்த்தகாச் சொன்ன இடத்திலும் மீன் வலை விரிக்கப்பட்டு தீவிரமாகத் தேடினர்.

ஆறுமுக மங்கலம் பெரிய குளம்

ஆனால், எதுவும் அகப்படவில்லை. இதையடுத்து, ஏரல் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் குளத்தின் கரைப் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்தனர். அதில், “ஆறுமுகமங்கலம் குளத்தில் முதலை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் யாரும் குளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும் மீன்பிடிக்கவும், விளையாடவும் குளத்திற்குச் செல்ல வேண்டாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் வனச்சரகர் சுப்பிரமணியனிடம் பேசினோம். “விவசாயிகள் வாழைத் தோட்டத்தில் அடையாளாம் காட்டிய கால் தடங்களை ஆய்வு செய்தோம். அது முதலையின் கால்தடத்தை ஒத்துள்ளது. ஆனால், முதலையின் கால்தடம்தான் என்பதை உறுதியாகச் சொல்ல இயலாது” என்றனர்.

ஆறுமுகமங்கலம் பெரிய குளம்

Also Read: 50 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய மதுரை மாடக்குளம் கண்மாய்; குத்துக்கல் விழா நடத்திய விவசாயிகள்!

ஏரல் தாலுகா அதிகாரிகள், “குளத்திற்கு குளிக்கச் சென்ற போது முதலையைப் பார்த்ததாகச் சிலர் கூறினர். வனத்துறையினருடன் சேர்ந்து தேடியதில் எதுவும் அகப்படவில்லை. இருப்பினும், அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவிய அச்சத்தாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதியும் குளத்துக் கரையில் எச்சரிக்கை அறிவுப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது” என்றனர். வாழைத்தோட்டத்தில் முதலையின் கால்தடத்தையும், குளத்துப் பகுதியில் முதலையையும் பார்த்தகாச் சொல்லபட்ட தகவலால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

AIARA

🔊 Listen to this தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுணடம் தாமிரபரணி ஆற்றுத் தடுப்பணையின் வடகால் வாய்க்கால் பாசனம் மூலம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பெரிய குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்தக் குளத்தின் மூலம் 2,039 ஏக்கர் பரப்பளவுள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. அத்துடன், அப்பகுதி மக்கள், குளிக்கவும் இக்குளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்தக் குளம் நிரம்பியிள்ளது. ஆகாயத் தாமரைச் செடிகளும் குளத்தை ஆக்கிரமித்துள்ளன. வாழையே இப்பகுதியில் பிரதான…

AIARA

🔊 Listen to this தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுணடம் தாமிரபரணி ஆற்றுத் தடுப்பணையின் வடகால் வாய்க்கால் பாசனம் மூலம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பெரிய குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்தக் குளத்தின் மூலம் 2,039 ஏக்கர் பரப்பளவுள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. அத்துடன், அப்பகுதி மக்கள், குளிக்கவும் இக்குளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்தக் குளம் நிரம்பியிள்ளது. ஆகாயத் தாமரைச் செடிகளும் குளத்தை ஆக்கிரமித்துள்ளன. வாழையே இப்பகுதியில் பிரதான…