ஆரன்குளம் நிரம்பி வயலுக்கு புகுந்த தண்ணீர்: 80 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

பாப்பாக்குடி: நெல்லை மாவட்டத்தில் விடாது கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. முக்கூடலை அடுத்த அரியநாயகிபுரம் சாலையிலுள்ள ஆரன்குளமும் நிரம்பியதால் இதன் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டன. வழக்கமாக இந்த தண்ணீர் சாலையில் உள்ள பாலம் வழியே தாமிரபரணி ஆற்றில் கலக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலையை மேம்படுத்தும் போது பாலத்திற்கு பதில் குழாய் அமைத்து சாலை அமைக்கப்பட்டது.தற்போது குளத்தில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுவதாலும் குழாயின் கொள்ளளவு குறைந்தளவே இருப்பதாலும் இந்த தண்ணீர் சாலையில் பாய்ந்து அருகில் உள்ள வயல்வெளிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடப்பட்ட சுமார் 80 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். மேலும் குழாய் பாலத்தை அகற்றிவிட்டு தண்ணீர் செல்ல வசதியாக கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

AIARA

🔊 Listen to this பாப்பாக்குடி: நெல்லை மாவட்டத்தில் விடாது கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. முக்கூடலை அடுத்த அரியநாயகிபுரம் சாலையிலுள்ள ஆரன்குளமும் நிரம்பியதால் இதன் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டன. வழக்கமாக இந்த தண்ணீர் சாலையில் உள்ள பாலம் வழியே தாமிரபரணி ஆற்றில் கலக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலையை மேம்படுத்தும் போது பாலத்திற்கு பதில் குழாய் அமைத்து சாலை அமைக்கப்பட்டது.தற்போது குளத்தில் இருந்து அதிகளவில் தண்ணீர்…