ஆந்திரா: கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து… கோதாவரி ஆற்றில் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், அஸ்வராப்பேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகுடேம் நோக்கி சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து ஜங்காரெட்டிகுடம் மண்டலத்தில் உள்ள ஜில்லருவாகு பகுதியில் பாலம் ஒன்றின் மீது சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால், பாலத்தில் மோதிய அரசுப் பேருந்து பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்களை உடைத்துக் கொண்டு, கோதாவரி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததில், சிக்கிக் கொண்டனர். அதையடுத்து, விபத்து தொடர்பாக உடனடியாக தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்கள் உதவியுடன் இறங்கினர்.

பேருந்து விபத்து

பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், தீயணைப்புத் துறை வீரர்கள் இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

🔊 Listen to this ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், அஸ்வராப்பேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகுடேம் நோக்கி சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து ஜங்காரெட்டிகுடம் மண்டலத்தில் உள்ள ஜில்லருவாகு பகுதியில் பாலம் ஒன்றின் மீது சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், பாலத்தில் மோதிய அரசுப் பேருந்து பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்களை உடைத்துக் கொண்டு, கோதாவரி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில்…